பக்கம்:மன ஊஞ்சல்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 107 ராதாவுக்கு எடுத்துச் சொல்லியிருந்தாளே தவிர, சுந்தரே சனைப் பொறுத்த செய்தி எதுவும் சொல்லவேயில்லை. ராதா, தன் இதயத்தை அப்படியே தங்கத்திற்கு விரித்துக் காட்டிவிட்டாள் என்றே சொல்ல வேண்டும். நடராசன் எப்படிப்பட்டவராயிருந்த போதிலும் அவரையே கட்டிக்கொள்வதென்று தான் தீர்மானித்துவிட்டதாக அவள் உறுதியாகச் சொன்னாள். அவனையும் தன்னையும் சேர்த்துப் பார்த்து-அவள் கட்டியிருந்த இன்பக் கனவுகளையெல்லாம் எடுத்தெடுத்துச் சொன்னாள். முதலில் சிறிது அலட்சியமாகவே அவள் பேச்சுக் களைக் கேட்டுக் கொண்டு வந்த தங்கம், போகப் போகக் கவனமாகக் கேட்கத் தொடங்கினாள். ராதா தன் காதலை விவரித்துச் சொல்லச் சொல்லத் தங்கத்தின் மனத்தில் வியப்பும் பிரமிப்பும் மேலோங்கின. - - ஒரு பெண் ஒர் ஆடவனிடம் இதயத்தைச் செலுத்தி விட்டால் அவனைச் சாதாரண மனிதனாக மதிப்பதில்லை. மனிதர்களுக்கு எல்லாம் மேலாக, மிக மிக உயர்ந்தவனாக மதிக்கத் தொடங்கிவிடுகிறாள் என்ற எண்ணம் தங்கத்திற்கு ஏற்பட்டது. தான், தன் அத்தானே அவ்வளவு மேலாகக் காதலிக்கவில்லை என்ற தாழ்வுணர்ச்சி கூட அவளுக்கு உண்டாகியது. ராதா பேசப் பேச அவளுக்கே நடராசன் உயர்ந்தவனாகக் காணப்பட்டான். கடைசியாக ராதாவுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய தங்கத்துக்கு, மனத்தில் ஏதோ புது விதமான உணர்ச்சி ஒன்று தோன்றியிருந்தது. ஒருவேளை அவளுக்கு ராதாவின் மேல் ஏற்பட்ட பொறாமையுணர்ச் சியாகக்கூட அது இருக்கலாமோ என்று எண்ணும்படியாக இருந்தது. தனக்கு நடராசன் மேல் காதல் இல்லை என்று அவள் தெளிவாக உணர்ந்தாள். ஆனால், அவனை ராதா காதலிப்பதைக் கண்டு தனக்கு ஏன் பொறாமை போன்ற உணர்ச்சி தோன்ற வேண்டும் என்று அவளுக்கே புரியவில்லை ஒரே குழப்ப மாயிருந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/117&oldid=854220" இலிருந்து மீள்விக்கப்பட்டது