பக்கம்:மன ஊஞ்சல்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IDEJ ஊஞ்சல் 13. நடராசன் ஓடிவிட்டான். வீட்டிலே பணம் கொண்டு வந்து தரவில்லை யென்று சொல்லி நச்சரித்தாளாம் மனைவி, அதைத் தாங்கமாட்டாமல் சீட்டாடக் கிளப்புக்குப் போனான். அங்கே யிருந்தவர்கள் அவனைப் பழைய பாக்கி கேட்டுத் துன்புறுத்தினார்களாம். மனத்துன்பத்தை மறப்பதற்காக ஒருவன் திரைப்படம் பார்க்கப் போனானாம். அங்கே படத்தில் ஒடிய கதையோ "சோகக்கதையாக இருந்ததாம். அது அவனுடைய மனத் துயரத்தை அதிகப்படுத்தவே உதவியதாம், மனிதர்கள் பெரும்பாலான சமயங்களில் இப்படித்தான், அழுக்குத் தீரக் குளிக்கலாம் என்று எண்ணிக் கொண்டு, சேற்றிலே இறங்கியவன் கதை போல, தங்கள் துன்பத்தைத் தீர்க்க முயன்று மேலும் துன்பப்படும் நிலையை அடைகிறார்கள். தங்கமும் இப்படித்தான் தன் மனக் குழப்பத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டு ராதா வீட்டிற்குப் போனபின், மேலும் குழம்பிய மனத்தோடு வீட்டுக்குத் திரும்பி வந்து சேர்ந்தாள். அவளால் வீட்டில் இருக்கவே முடிய வில்லை. ஆகவே தோட்டத்திற்குள் நுழைந்து மல்லிகைப் பந்தலின் அடியில், மாலை வெயில் அவளுடைய பொன்வண்ண் மேனிக்கு முலாம் பூசி அழகு செய்ய, ஓவியச்சிலைபோல் உட்கார்ந்து சிந்தனை வயப்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/118&oldid=854221" இலிருந்து மீள்விக்கப்பட்டது