பக்கம்:மன ஊஞ்சல்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 109 இருந்தாள். அவள் எவ்வளவு முயன்றும், ராதாவின் பேச்சுக் களை மறக்கவே முடியவில்லை. அவள் நடராசனைப் பற்றிக் கூறிய ஒவ்வொரு வரியும் அவள் உள்ளத்தில் ஒவ்வொரு படி அவனைப் பற்றிய மதிப்பை உயர்த்தி ஏற்றுவதாகவே யிருந்தது. இவ்வளவு நாளும் தங்கம் நடராசனை மிகவும் சாதாரணமாகவே எண்ணிக் கொண்டிருந்தாள். இப்போது ராதா பேசியதைப் பார்க்கும்போது, அதே நடராசன் எங்கோ ஒரு பெரிய குன்றின் மீது மிக உயரமான முடியின் உச்சியில் ஒளி வீசுகின்ற பெருஞ்சோதி போலத் தோன்றினான். இவ்வளவு நாளும் தனக்கு அவனைப்பற்றி இம்மாதிரியான கருத்துத் தோன்றாதபோது, ராதாவுக்கு மட்டும் எப்படித் தோன்றியது என்று அவள் ஆச்சரியப் பட்டாள். - ஒரு வேளை ராதா அவன் மீது கொண்டுள்ள காதலால் அவனை இவ்வளவு உயர்த்திப் பேசுவதாயிருக்கக் கூடும் என்ற எண்ணம் தங்கத்தின் இதயத்தில் திரும்பத் திரும்பத் தலைதுாக்கியது. ஆனால் அதே சமயம் தான் விரும்புகின்ற தன் அத்தான் மீது தனக்கு இவ்வளவு மகோன்னதமான கருத்து எதுவும் உண்டாக வில்லையே என்றும் தங்கம் எண்ணினாள். அத்தான் சுந்தரேசனுடைய நினைப்பு வந்ததும், அவளுக்கு, நடராசன் மதிப்பை எடை போட ஒர் அளவு கோல் கிடைத்தது போலாயிற்று. நடராசனுக்கும் அத்தான் க ந் த ரே ச னு க் கும் இடையேயுள்ள பண்பு பாகுபடுகளை அவள் ஒப்பிட்டுப் பார்த்தாள். நடராசன் நல்லவன்: களங்கமற்றவன். உயர்ந்த பழக்க வழக்கங்களும், பண்பு நலங்களும் சிறக்கப் பெற்றவன். ஆனால், எவ்வளவு இருந்தாலும் அவன் அத்தான் சுந்த ரேசனைக் காட்டிலும் மட்டமானவனாகவே அவளுக்குத் .*.*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/119&oldid=854222" இலிருந்து மீள்விக்கப்பட்டது