பக்கம்:மன ஊஞ்சல்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மன ஊஞ்சல் கிறார்கள்? முற்போக்கு, பொதுவுடமை ஆகியவற்றைப் பற்றி வாய் கிழியப் பேசுகிறவர்கள் எல்லாம் தங்கள் சொந் தப் பிரச்னை வரும்போது திசை மாறிவிடுகிறார்கள். வரதட்சினை, பூரீதனம், சீர்வரிசை என்ற பெயர்கள் எல்லாம் பெண்ணைப் பெற்றவனின் பண பலத்தைப் பரிசோதிப்பதற்காகச் சமூகத்திலே உண்டாக்கப்பட்டவை. ஆனால், அவை பரிசோதனை செய்வதோடு நின்றுவிட்டால் பாதகமில்லை. ஏழைப்பெண்களின் இன்பவாழ்வுக்குக் குறுக் குச் சுவர்களாகவும் நிற்கின்றன. தொடக்கப்பள்ளியில் வேலை பார்க்கும் ஏ ைழ க் கந்தசாமி வாத்தியாருக்கு உயிரோடு இருக்கின்ற ஒரே ஒரு மகள் தங்கம். அவளுக்கு முன்னும் பின்னும் தோன்றி வளர்ந்து நோயாகிக் கிடந்து கொஞ்ச நஞ்ச நிலபுலன் களுக்குச் சொந்தக்காரராக இருந்த கந்தசாமி வாத்தியாரை கந்தலாடைக்காரராக்கி விட்டு மறைந்து போய் விட்டன மற்ற குழ்ந்தைச் செல்வங்கள். மிஞ்சியிருந்த ஒரே ஒரு பெண்ணைக் கந்தசாமி வாத்தியாரும் அவருடைய மனைவி மரகதமும் தங்கத்தைப் பாதுகாப்பதுபோல் பாதுகாத்து வந்தார்கள். * தங்கம் மற்ற குழந்தைகளைப் போல் செத்து மடிந்திருத் தால் கந்தசாமி வாததியாருக்கு இந்தக் கவலை ஏற்பட்டி ருக்காது என்று சொல்லலாம். ஆனால, அவளும் போயிருந் தால், அவரும் அவர் மனைவியும் உயிரோடு இருந்துவர முடியுமா? கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த அந்தத் தங்கம்தான் எவ்வளவு புத்திசாலிப் பெண்ணாக வளர்ந்து விட்டாள். கந்தசாமி வாத்தியார் ஒவ்வொரு முறை தனக்குள் நினைத்துப் பார்ப்பார். தனக்கும் தங்கத்துக்கும் ஒரே சம யத்தில் தேர்வு வைத்தால், தங்கம் தான் தன்னைக் காட்டி லும் அதிக மதிப்பெண் வாக்குவாள் என்று தோன்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/12&oldid=854223" இலிருந்து மீள்விக்கப்பட்டது