பக்கம்:மன ஊஞ்சல்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 மன ஊஞ்சல் தோன்றினான். அத்தான் சுந்தரேசனுடைய ஒரு புன்சிரிப் புக்கு முன் இத்தனை குணப்பண்புகளும் தலைகுணிந்தோட வேண்டியதுதான். அத்தானுக்கு இந்த நல்ல குணங்கள் குறைவு தான் என்றாலும், அவரிட மிருந்த கவர்ச்சிக்கு முன் இவையெல்லாம் என்ன செய்தும் தலை தூக்கமுடியவில்லை, தன் அத்தானுக்கு முன்னால், நடராசன் ஒப்பிட்டுப் பார்ப் பதற்கே உரியவனல்ல என்று கூட அவள் மனம் முடிவு கட்டியது. ஆனால், அவனைப்பற்றி ராதா இவ்வளவு பெரிதாக எண்ணி கொண்டிருக்கிறாளே என்று அவளுக்கு வியப்பாக இருந்தது. ஆச்சரியப் படும்படியாக அவள் கொண்ட வியப்புணர்ச் சியை மாற்றிக் கொள்ளும் படியான நிகழ்ச்சி ஒன்று அப்போது நடந்தது. நடராசனே அவள் முன்னால் அப்போது வந்து நின்றான். ஆம்! உண்மையில் அப்போது நடராசன் தான் அவன் முன்னே வந்து நின்றான். சுந்தரேசன் இருந்தவரை, அவனுடன் ஏதாவது வீண் சச்சரவு ஏற்படக் கூடும் என்ற எண்ணத்தில் அவன் தங்கத்துடன் நெருங்கிப் பேச முனையாமல் இருந்தான். இப்போது. சுந்தரேசன் இல்லாத படியால் தான் அவளைக் கண்டு பேசலாமென்று முடிவு கட்டிக் கொண்டு அவன் அங்கே வந்து சேர்ந்தான். ராதா சொன்ன விஷயங்களை மனத்தில் வைத்துக் கொண்டே அவள் அவனை நிமிர்ந்து நோக்கினாள். அவனைப் பார்க்கப் பார்க்க அவளுக்கும் ராதாவின் இதயத் தில் ஏற் பட்ட அந்த உயர்வான எண்ணங்களே உண்டாயின. இனிமையாக டங்காரம் செய்து கொண்டிருந்த வீணையின் தந்திக் கம்பிகள் திடீரென்று அறுந்து தெறித்ததைப் போல அவளுடைய பார்வை பையப் பைய அவள் முகத்தை விட்டு இறங்கி வந்தபோது அந்தக் குறைபட்டகையைக் கண்டவுடன் அவனைப்பற்றி அவளுக்கு ஏற்பட்ட அந்த உயர்ந்த எண்ணங்களெல்லாம் சடாரென்று மாறி விட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/120&oldid=854224" இலிருந்து மீள்விக்கப்பட்டது