பக்கம்:மன ஊஞ்சல்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 111 பண்பிலும், பழக்க வழக்கத்திலும், நேர்மையிலும் நாணயத்திலும், உண்மையிலும், ஒ மு. க் க த் தி லு ம் எத்தனையோ குறைகள் உள்ள சுந்தரேசன் அவளுக்கு உயர்ந்தவனாகத் தோன்றினான். ஆனால், எல்லா வகையிலும் நிறைவான நடராசன் அந்த ஒருகை, குறைவாக இருந்த காரணத்தால் மட்டுமே பிடிக்காதவனாகி விட்டான். ராதாவுடன் பேசிக் கொண்டிருந்த போதுகூடத் தங்கம் இப்படித் தான் எண்ணினாள். எல்லா வகையிலும் நடராசன் உயர்ந்தவர் தான். ஆனால் அந்தக் கை மட்டும் ஒழுங்காக இருந்து விட்டால்...! அந்த ஒரு காரணம் மட்டும் போதுமா அவனை வெறுத்தொதுக்க இல்லை அவளையறியாமல் வேறு ஏதேனும் காரணமிருக்குமா? தெரியவில்லை. ஆனால் சுந்தரேசனைப் பற்றி நினைக்கும்போது மட்டும், அவனுடைய குறைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவே அவள் தன் இதயத்தை விடுவதில்லை. இப்படிப்பட்ட மன நிலையில் இருந்த தங்கத்திடம் நடராசன் கேட்கவந்த செய்தியை நினைத்துப் பார்த்தால்த நிலைமை தெரியாத பேச்சாகத்தான் அது தோன்றும். 'தங்கம், உன்னிடம் ஒன்று கேட்கவிரும்புகிறேன்’ என்று பேச்சைத் தொடங்கினான் நடராசன். தங்கம் பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவன் சொல்லுவதைக் கேட்கத் தயாராக இருந்தாள். 'தங்கம், உன் மனத்தில் என்ன இருக்குமோ எனக்குத் தெரியாது. ஆனால் என் மனத்தில் உள்ளதை நான் சொல்வி விடுகிறேன். கேள்! கேட்டு அது பற்றிய உன் கருத்தைக் கூறு. பல நாட்களுக்கு முன்னால் என் தந்தையும் உன் தந்தையும் கூடி நமக்குத் திருமணம் செய்து வைப்பது பற்றி ஆலோசித் த ார் க ளா ம் . அப்போது தான் பைத்தியக்காரனாக இருந்ததை முன்னிட்டு ஒரு முடிவும் ஆகவில்லையாம். நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/121&oldid=854225" இலிருந்து மீள்விக்கப்பட்டது