பக்கம்:மன ஊஞ்சல்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மன ஊஞ்சல் மறுத்தாயோ. அல்லது உன் தாய்தந்தையர் மறுத்தார்களோ தெரியாது. ஆனால், இப்போது நான்பைத்தியமல்ல-இனி நான் பைத்தியமாகவும் மாறமாட்டேன் என்று எனக்கு உறுதியாகத் தெரிகிறது. ஆகையால் தான் நான் உன்னிடம் இது பற்றிப் பேசத் துணிந்தேன். உனக்கு என்மேல் அன்புண்டா? அப்படிச் சிறிதாவது அன்பிருக்குமானால், என் இல்லத் துணைவியாக நீ வருவாயா? இதை அறிந்து கொள்ளவே நான் உன்னை நாடி வந்தேன்' என்றான் நடராசன். அவன் பேச்சு, காதலனுடையதைப் போல் இல்லை. அப்படி யிருந்திருக்குமானால் தங்கம் அவ்வளவு நேரம் அதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்திருப் பாளா என்பதும் ஐயம்தான்! முன்னமேயே அவளிடம் இன்னதுதான் பேச வேண்டுமென்று திட்டவட்டமாக முடிவு செய்து கொண்டு வந்தவனைப்போல் அவன் பேசினான். ஆனால், அந்தப் பேச்சிலும், அவன் தங்கத்தின் மேல் கொண்டிருந்த அளவு கடந்த காதல் வெளிப்பட்டுத் தோன்றாமவில்லை. தங்கமும் திட்டவட்டமாகத் தெரிவித்தாள், தயவு செய்து இதுபற்றி இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் என்று. நடராசனும் ஆதரவான பதிலே நிச்சயமாகக் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டு வரவில்லை. சந்தேகமான மனநிலையுடன்தான் வந்திருந்தான். ஆகவே, ஒன்றை எதிர்பார்த்து தான் ஏமாற்றமடைந்த அதிர்ச்சி அவனிடம் காணப்படவில்லை. இருந்தாலும், அவன் உள்ளத்தின் அடித் தளத்திலே இந்த ஏமாற்றம் போய்த்தாக்கி அதைத் துண்டு பண்ணாமலும் விடவில்லை. உள்ளம் உடைந்தது வெளிப் பட்டுத் தோன்றாத நிலையில் நடராசன் அமைதியான போக்கில் சிறிதும் கலங்காதவனைப் போல நின்றான். பிற வாயெடுத்துக் கேட்டான். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/122&oldid=854226" இலிருந்து மீள்விக்கப்பட்டது