பக்கம்:மன ஊஞ்சல்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 113

  • அப்படியானால், தங்கம், உனக்கு என்மீது அன்பு கிடையாதா”

‘அன்பு உண்டு-ஆனால், காதல் கிடையாது!உங்களைக் காதலிக்க இன்னொருத்தி இருக்கிறாள்!" என்றாள் தங்கம். ஆனால் அவள் சொன்ன இரண்டாவது செய்தியைத் காதில் வாங்கிக்கொள்ளாமலே அவன் விடுவிடு வென்று நடந்து போய்விட்டான். காதல் கிடையாது என்ற அந்த வார்த்தைகள் ஏற்கனவே உள்ளுக்குள் உடைந்திருந்த இதயத்தைச் சல்லி சல்வியாக்கி விட்டனவோ என்னவோ, மேலும் நிற்காமல் விடுவிடுவென்று நடந்து தோட்டத்தை விட்டு வெளியேறி விட்டான். தங்கம் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், மறுநாள் மாலை முருகேச வாத்தியார் கந்தசாமி வந்தியாரைத் தேடிக் கொண்டு வந்தபோது தான், தங்கத்திற்குக் கவலை ஏற்பட ஆரம்பித்தது. முருகேச வாத்தியார் வீட்டுக்குள் நுழையும்போதே அவர் முகத்தில் பதற்றத்தின் அறிகுறி தென்பட்டது. உள்ளே வந்ததும், அவர் படபடவென்று, "ஜயோ கந்தசாமி, நேற்றிலிருந்து நடராசனைக் காணவில்லையே!' என்று கதற ஆரம்பித்து விட்டாள். மேலேயிருந்த அண்ணாமலைப் ப எண் டி த ர் அப்போது கீழே இறங்கி வந்தார். அவரைப் பார்த்தவுடன் முருகேசர் சின்னக் குழந்தையைப்போல் தேம்பித் தேம்பி அழுது கொண்டே, 'ஐயா எவ்வளவு அருமையாக வளர்த் தேன். என்றும் என் சொல்லுக்கு மீறிப் பேசாதவன் அந்தப் பிள்ளை-இப்பொழுது எங்கு போனானோ தெரிய வில்லையே! பைத்தியக் காரனாக இருந்தபோதுகூட என் அனுமதியில்லாமல் எதுவும் செய்யமாட்டானே! இப்போது நேற்றிலிருந்து காணவில்லையே!” என்று பதைத்துப் பதறி அவர் கதறிய காட்சியைக் காணத் துன்பமாயிருந்தது. u-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/123&oldid=854227" இலிருந்து மீள்விக்கப்பட்டது