பக்கம்:மன ஊஞ்சல்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 மன ஊஞ்சல் எங்கேயாவது போயிருப்பான். சொல்லிவிட்டுப்போக சந்தர்ப்பம் கிடைத்திருக்காது திரும்பிவந்துவிடுவான். ஆண் பிள்ளை காணாமற்போனதற்கு நீங்கள் இப்படிப் பெண் பிள்ளை போல் அழுவது நன்றாக இல்லையே!' என்று சொன்னார் அண்ணாமலைப் பண்டிதர். 'ஐயா, அவன் சொல்லாமற் போயிருந்தால் நான் இவ்வளவு கவலைப்படமாட்டேன், அன்று தங்கத்தைத்தேடி அவன் போனதைப் பற்றிக்கூட நான் கவனிக்கவே யில்லையே. இப்போது கடிதம் எழுதிவைத்து விட்டுப் போயிருக்கிறானே. அதுதானே எனக்குக் கவலையளிக்கிறது!’ என்று சொல்லித் தன் பையிலிருந்த ஒரு கடிதத் துண்டை எடுத்து அண்ணாமலைப் பண்டிதரிடம் கொடுத்தார். கொடுக்கும் போது அவர் கைகள் நடுங்கின. அண்ணாமலைப் பண்டிதர் முதலில் அந்தக் கடிதத்தை மனத்துக்குள் படித்துக் கொண்டார். பிறகு, கந்தசாமி வாத்தியார் முதலியவர்கள் அதன் உள்ளடக்கத்தை அறிய ஆவலுடையவர்களாயிருப்பதைக் கண்டு, அதை வாய் விட்டுப் படிக்கலானார். வணக்கத்திற்குரிய தந்தையார் அவர்களுக்கு, நடராசன் பணிவுடன் எழுதிக் கொள்ளும் கடிதம். சின்ன வயதிலிருந்து என்னைப் பெற்றவர்களினும் உயர்வாகப் பேணி வளர்த்த உங்களுடைய அன்புக்கு முற்றிலும் கடமைப் பட்டவன் நான். என்றாலும், சில நாட்களாக என் மனத்திலே ஏற்பட்டு வந்த ஒரு குறை காரணமாக, என்னால் இந்த ஊரில் மன அமைதியோடு இருக்க முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. ஆகவே, நான் எங்காவது ஒரு தூர தேசத்தில் போய் சில நாட்களைக் கழித்து-உலகானுபவத்தையும் பெற்றுத் திரும்பிவர எண்ணியுள்ளேன். என் பிரிவைத் தாங்கள் பொறுக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/124&oldid=854228" இலிருந்து மீள்விக்கப்பட்டது