பக்கம்:மன ஊஞ்சல்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 115 ஆனால், எனக்காகப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டு கிறேன். என்னிடம் அன்பு பாராட்டி வரும் கந்தசாமி வாத்தியார். அண்ணாமலைப் பண்டிதர் இருவருக்கும் என் நன்றியதலைக் கூறுங்கள். இப்படிக்குத் தங்களை என்றும் மறவாத மகன் நடராசன் கடிதத்தைப் படித்து முடித்ததும் எ ல் லே ரு ம் அசைவற்று நின்றார்கள். அவர்கள் எல்லோருடைய உடலும் கற்சிலைபோல் நின்றனவே தவிர, அவர்களின் உள்ளங்கள் எல்லாம், அலைகடல்போல் கொந்தளித்துக்கொண்டிருந்தன. அண்ணாமலைப் பண்டிதர் ஒருவர்தான் நிலை குலையாத நெஞ்சுடன் இருந்தார். மற்றவர்கள் எல்லோரும் பெருத்த கவலையோடு பலப்பலவாறு எண்ணங்களை செல்லவிட்டுக் கொண்டிருந்தார்கள். தங்கத்தின் நிலைதான் மிகப் பரிதாபமாயிருந்தது. நடராசன், தன்னுடைய மறுதலிப்பைக் கேட்டுவிட்டுத் தான் மனமுடைந்து ஊரைவிட்டுப் போய்விட்டான் என்பது அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அவன் தன் மேல் கொண்டிருந்த காதலை மறக்கத்தான் ஊரைவிட்டுப் போக முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் நன்றாக உணர்ந்தாள். அவன் மீது அவளுக்கு அன்பு இருந்தது: இப் போது இரக்கமும் பிறந்தது. ஆனால் அந்த அன்போ. இாக் கமோ, அவன் மீது காதல் கொளளும்படியாகத் தூண்டக் கூடிய ஆற்றல்பெற்றனவாக இல்லை. அவன் ஆசையைத் தான் நிறைவேற்ற முடியாதநிலையில் இருப்பதற்காக அவள் வருந் தினாள், தனக்கு அவனைப் பிடிக்கவில்லை என்பது தெரிந் தால், அவன் மனத்தை யடக்கிக்கொண்டு பேசாமல் இருந் திருக்க வேண்டும் என்றுதான் அவளுக்குத் தோன்றியது. இவ் வளவு பேருடைய மனமும் சஞ்சலப்படும்படி செய்துவிட்டு ஏன் ஊரைவிட்டு ஓடவேண்டும், மனத்தை அடக்கிக்கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/125&oldid=854229" இலிருந்து மீள்விக்கப்பட்டது