பக்கம்:மன ஊஞ்சல்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மன ஊஞ்சல் முடியாதவர்கள் எப்படித்தான். உலகத்தில் வாழ முடியும்? என்றெல்லாம் அவள் எண்ணினாள். ராதாவைப் பற்றி நினைக்கும்போதுதான் அவளுக்குப் பகீர் என்றது. நடராசன் ஊரை விட்டே போய்விட்டசெய்தி அறிந்தால், அவள் எவ் வளவு துன்பப்படுவாள் என்று எண்ணிப்பார்க்கவே முடிய வில்லை. பாவம்! அவன் தன்னைத்காதலித்ததன் காரணமாக ஒடிவிட்டான் என்று அறிந்தால் அவளுக்கு இன்னும் எவ்வளவு துயரமாயிருக்கும் என்று எண்ணியபோது தங்கத்தாலேயே தாள முடியவில்லை. அண்ணாமலைப் பண்டிதர் அப்போது கேட்ட கேள்வி தங்கத்தை மேலும் குடைவதாயிருந்தது. "இங்குள்ளவர்கள் யாரிடமும் நடராசன் போவதற்கு முன்னால் எதுவும் சொல்லவில்லையா?” என்று கேட்டார், பண்டிதர். யாரும் பதில் கூறவில்லை. மறுபடியும், அவர் தங்கத்தை நோக்கி, ஏன் தங்கம், உன்னிடம்கூட நடராசன் எதுவும் கூறவில்லையா?" என்று கேட்டார். தங்கம் திடுக்கிட்டுத் திரும்பி அவரை நோக் கினாள். கூர்மையான அவருடைய கண்களை அவளால் சந்திக்க முடியவில்லை. சட்டென்று தலையைத் தாழ்த்திக் கொண்டாள். நடந்ததைக் கூறினால் மற்றவர்கள் தன் மீது கோபமும் வெறுப்பும் கொள்ளக் கூடுமென்பது உறுதி, அதிலும், முருகேச வாத்தியாருக்கு-தன்னால்தான்.நடராசன் மனவருத்தப்பட்டுப் போய்விட்டான் என்ற எண்ணம் ஏற். பட்டால்-எப்படி யிருக்கும் என்று தோன்றியது. ஆகவே, "நான் அவரைப் பார்க்கவே யில்லையே’ என்று ஒரு சிறு பொய்யைச் சொல்லி வைத் தாள். அந்தப் பொய் சின்ன தாயிருந்தாலும் அவளைப் பெரிய நெருக்கடியொன்றி லிருந்து தப்பச் செய்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/126&oldid=854230" இலிருந்து மீள்விக்கப்பட்டது