பக்கம்:மன ஊஞ்சல்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 117 பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கருத்தைக் கூறினார்கள். ஆலோசனைகள் நெடுநேரம் நடந்து கொண்டிருந்தன. தங்கம் அந்தப் பேச்சுக்களின் போக்கைக் கவனித்துக் கொண்டிருந்தாளே தவிர அவற்றில் கலந்து கொள்ளவில்லை. கடைசியில் அண்ணாமலைப் பண்டிதர்தான் எல்லோரையும் சமாதானப்படுத்தினார். நடராசன் என்ன சின்னப் பிள்ளையா? அவனுக்கிருக்கிற அறிவுக்கு அவன் எங்கே போனாலும் பிழைத்துக்கொள்வான். அவன் பிழைத்து நன்றாக இருக்கவேண்டுமென்று வாழ்த்தி விட்டுப் பேசாமல் இருங்கள். அவனுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற் படாது!’ என்று கூறினார். அது எல்லோருக்கும் சிறிது மனவருத்தத்தைக் குறைப்பதாக இருந்தது. அதன் பிறகு முருகேச வாத்தியார் தம் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார், அண்ணாமலைப் பண்டிதரின் விளக்க மொழிகளைக் கேட்டதனால்தான் அவர் அங்கிருந்து போனார் என்று கூற வேண்டும். பேச்செல்லாம் முடிந்தபிறகு, தங்கம் தோட்டத்துக்குள் நுழைந்தாள். அவள் முகம் ஒரே வாட்டமாயிருந்தது. அவள் மனம் இதற்கும் உனக்கும் எவ்விதமான சம்பந்தமுமில்லை; நடராசன் ஊரைவிட்டுப் போனதற்கு நீ எப்படிப் பொறுப் பாளியாவாய்? என்று எடுத்தெடுத்துக் கூறியபோதிலும், அவளால் துன்பத்தை வெல்ல முடியவில்லை. - வேதனை நிறைந்த உள்ளத்தோடு அவள் மல்லிகைப் பந்தவை நோக்கிச் சென்றாள். அவள் பந்தலையடைந்து அங்கே உட்கார முயன்றபோது, பின்னால் யாரோ வரும் காலடி யோசை கேட்டது. திரும்பிப் பார்த்தாள். அவள்முன் அண்ணாமலைப் பண்டிதர் குறும்பாகப் பார்த்துக் கொண்டு நின்றார். அவரைக்கண்டவுடன் தங்கத்துக்கு உடலெல்லாம் உதற லெடுக்க ஆரம்பித்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/127&oldid=854231" இலிருந்து மீள்விக்கப்பட்டது