பக்கம்:மன ஊஞ்சல்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் I19 எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்றெல்லாம் ஊடுருவிப் பார்ப்பார்கள். இதையெல்லாம் தெரிந்து கொள்வதால் அவர்களுக்கு ஏதேனும் பயனிருக்குமா என்றால் அதுவும் இருக்காது. என்ன பலன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ஒரே ஒரு பலன் மட்டும் இப்படிப்பட்ட உளவறி தொழிலால், உண்டு. அது என்னவென்றால், பிறருடன் இதைப் பற்றிப் பேசிப் பொழுதுபோக்குவதாகும். ஒரு சிலர் இந்தப் பலனைக்கூட அனுபவிப்பதில்லை. மற்றவன் நலமாக வாழ்வதைப் பார்த்துப் பார்த்து உள்ளத்திற்குள்ளே பொறாமைப்பட்டுப் பொறாமைப்பட்டு வெளியிலும் சொல்ல மாட்டாமல், உள்ளுக்குள்ளும் அடக்கமாட்டாமல் பொருமிப் 'ொருமி வெத்து நொந்து செத்துக்கொண்டிருப்பார்கள். அண்ணாமலைப் பண்டிதர் இப்படிப்பட்ட அற்பக்குணம் படைத்தவரல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்; தங்கத்துக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், அவர் தன்னிடம் மட்டும் பெரிய மனிதராக நடந்துகொள்ளவில்லை என்பதை நெடுநாளாகவே தங்கம் உணர்ந்து வருகிறாள். இப்போதும் அவருடைய நடவடிக்கை அதற்கு விதிவிலக்கல்ல. தன்னிடம் நடராசன் எதுவும் கூறிவிட்டுப் போக வில்லையா என்று அவர் கேட்டபோதே. அவன் கூறிவிட்டுப் போயிருக்கிறான் என்பதை அவர் நன்றாக அறிந்திருக்கிறார் என்பதைத் தங்கம் புரிந்துகொண்டாள். இப்போது திரும் பவும் அதுபற்றிக் கேட்டுத் தன் உள்ளத்தைப் புண்ணாக்கிக் கண்டு மகிழவே அவர் தன்னைத் தொடர்ந்து வந்திருக்கிறார் என்ற எண்ணம் தங்கத்திற்கு உண்டாகியது. ஆகவே தான் அவர் என்ன கேட்பாரோ என்னவோ என்ற அச்சம் அவளுக்கு ஏற்பட்டது. அண்ணாமலைப் பண்டிதர் அவளைக் குறும்பாகப் பார்த்துக்கொண்டே, 'தங்கம், உண்மைதானா? நடராசன் உன்னிடம் எதுவும் சொல்லிவிட்டுப் போகவில்லையா?" என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/129&oldid=854233" இலிருந்து மீள்விக்கப்பட்டது