பக்கம்:மன ஊஞ்சல்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 3 அவ்வளவு படித்திருக்கிறாள் அவள். பெண்கள் எவ்வளவு படித்து என்ன? வெளியில் விளங்கித் தோன்ற முடிய வில்லையே! அறிவு, குணம், அழகு எல்லாம் இருந்தும் யாரும் தங்கத்தை நாடி வரவில்லை. நாடி வரவில்லையென்றால், கலியாணம் என்று சொல்லிக் கழுத்தில் தாலி கட்டித் தங்கள் இல்லத்து அரசியாக அவளை ஏற்றுக் கொள்ளத்தான் யாரும் நாடி வரவில்லை. வேறு விதத்தில் அவளை நாடி வந்த வர்கள் பலர். - அம்மாவுக்குச் சமையலுக்காக அவள் திருக்குளத்திற்குத் தண்ணிர் எடுக்கச் சென்றபோது கண்ணால் சாடை காட்டி அழைத்தவர்கள் இல்லாமல் இல்லை. அவள் தங்கம் பக்கம் திரும்பித் தன் செம்பவழ உதடுகளால் புன்னகை புரிவாளா என்று ஏங்கிக்கிடந்தவர்களும் இருந்தார்கள். கோயிலுக்குச் செல்லும்போது ஒரு நாளாவது அவள் கடைக்கண் அருள் கிடைக்காதா என்று தவங்கிடந்த பக்த சிகாமணிகளும் பலர் இருந்தனர். எந்தெந்தப் பாதையிலோ, எப்படியெப்படியோ போகத் திட்டமிட்டு முட்டி மோதித் தடுமாறி விழுந்த கந்தசாமி வாத்தியார் கடைசியில் திருமண முயற்சி செய்வதையே விட்டுவிட்டார். இருந்தாலும் மனத்திலே கவலை உறுத்திக் கொண்டுதான் இருந்தது. இப்படியே பத்து ஆண்டுகள் கழிந்து விட்டன. கொஞ்சிப் பேசும் பஞ்சவர்ணக்கிளி போல் கொள்ளை பழகுடைய தங்கத்தை வீட்டிலே வைத்துக் கொண்டு, பருவ மடைந்து பத்து வருடங்கள் ஆகியும் கட்டிக் கொடுக்க முடியாமல் திண்டாடுகின்ற கந்தசாமி வாத்தியாரின் கையாலாகாத் தனத்தைப் பற்றிப் பழித்துப் பேசாத வெண் கள் அந்த ஊரிலேயே கிடையாது. வம்பர் மகாசபை நிகழ்ச்சி நிரலிலே இது ஓர் அங்கமாகிப் போய் விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/13&oldid=854234" இலிருந்து மீள்விக்கப்பட்டது