பக்கம்:மன ஊஞ்சல்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மன ஊஞ்சல் தங்கம் எதுவும் பதில் சொல்ல வில்லை. பதில் சொல்லக் கூடிய நிலையில் அவள் இல்லை. அண்ணாமலைப் பண்டிதர் அமைதியாக நின்று கொண்டிருந்தார். தங்கம் வாய் திறவாது தலைகுனிந்தபடி நின்று கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்திற்குள்ளே பலமான போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அது மெல்ல மெல்ல அடங்கியது. அவளும் தாழ்ந்து குனிந்திருந்த தலையை மெல்ல மெல்ல நிமிர்த்தினாள். அப்போதும் அண்ணாமலைப் பண்டிதர் அங்கேதான் நின்று கொண்டிருந் தார். இப்போது அவர் முகத்திலே குறும்பு விளையாட வில்லை. சற்றுமுன் தோன்றிய அந்த அற்பத் தனமான குதர்க்கவாதப் புன்சிரிப்பு அப்போது அவர் முகத்திலே தென் படவில்லை. கருணையே வடிவான புத்தர் பிரானின் முகத்திலே தோன்றிய அந்த அமைதி நிறைந்த புன்சிரிப்பு அப்போது அண்ணாமலைப் பண்டிதரிடத்திலும் காணப் பட்டது. சாந்தி மார்க்கத்தை உலகுக்கெல்லாம் போதித்த காந்தியண்ணலின் பொக்கைவாயிலே மிளிர்ந்த அந்தப் பொன்மலர் பூத்ததொத்த மென்மையான புன்சிரிப்பு அப்போது அண்ணாமலைப் பண்டிதரின் இதழ்களுக்கிடையே மின்னித் தோன்றியது. அந்த அழகிய புன்சிரிப்புடன் கூடிய அவருடைய முகத்தைப் பார்த்ததும் தங்கத்திற்கு மனத்திற் குள்ளே ஒரு சலனம் ஏற்பட்டது. மன்த்தகத்துக்குள்ளே போராடிப் போராடிக் கடைசியாக அவர் எது கேட்டாலும் சொல்வதில்லையென்ற தீர்மானமான முடிவுக்கு வந்து தலை நிமிர்ந்த தங்கம் இப்போது அவர் எது கேட்டாலும் சொல்லக் கூடிய பச்சைக் குழந்தையாக மாறிவிட்டாள். நொடி நேரத்தில் அவளுடைய முடிவை மாற்றிக் கொள்ளச் செய்யும் படியான ஆற்றல் அவருடைய அந்தப் புன்னகைக்கிருந்தது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/130&oldid=854235" இலிருந்து மீள்விக்கப்பட்டது