பக்கம்:மன ஊஞ்சல்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 121 "தங்கம்! என்னிடம் உள்ளதைக் கூறிவிடு! நான் உனக்குக் கெடுதல் செய்யமாட்டேன்' என்று பரிவோடு கூறினார் அண்ணாமலைப் பண்டிதர். . அந்தப் பரிவு தங்கத்தை ஆட்கொண்டுவிட்டது, அவரிடம் என்றும் ஏற்படாத ஒரு நம்பிக்கையை அவளுக்கு ஏற்படும்படி செய்து விட்டது. தன்னைப் பெற்ற தாயிடம்கூட இதுவரை கூறக் துணியாத இரகசியங்களைத் தங்கம் அவரிடம் கூறத் தயாராகிவிட்டாள். "ஆம். என்னிடம் சொல்லிவிட்டுத் தான் போனார். ஆனால், ஊரைவிட்டுப் போவதாகச் சொல்லிவிட்டு போக வில்லை' என்றாள் தங்கம். வேறு என்ன சொன்னான்?’ என்று கேட்டார் பண்டிதர். "அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம். எனக்குச் சம்மதமா?' என்று கேட்டார். 'நீ என்ன சொன்னாய்?’’ "நான் என்ன சொல்லுவேன். எனக்கு நோக்கமில்லை என்றுதான் சொன்னேன்?’’ 'ஏன், அப்படிச் சொன்னாய்?’’ இந்தக் கேள்வியைக் கேட்டதும், தங்கத்தின் வாய் அடைத்துப் போய் விட்டது. 'தங்கம், அவன் நல்ல பையனாயிற்றே! ஏன். உனக்கு அவனைப் பிடிக்கவில்லையா?* இதற்கும் தங்கம் பதில் சொல்லவில்லை. - அண்ணாமலைப் பண்டிதர் மெல்ல அவளருகிலே நெருங்கினார், அவள் முதுகை அன்போடு தடவிக் கொடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/131&oldid=854236" இலிருந்து மீள்விக்கப்பட்டது