பக்கம்:மன ஊஞ்சல்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 . மன ஊஞ்சல் படி, "மகளே, உனக்கு வேறு யார் மீதும் அன்பு இருக்கிறதா? இருந்தால் சொல்!” என்று கேட்டார். தங்கத்தால் அந்த நேரத்தில் அவருக்குப் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை, என்னவோ தெரிய வில்லை அவர் தன்னைத் தம் சொல்லுக்குக் கட்டுப்படுத்தி விட்டதாகத் தோன்றியது. ஆமென்ற தோரணையில் அவள் தலையை அசைத்தாள். "மகளே, தங்கம், யார் உன் அன்புக்குப் பாத்திர மானவன்!” என்று மெல்லக் கேட்டார். அவருடைய இதமான கேள்விகள் ஒவ்வொன்றும். பிடாரன் ஒருவன் பாம்பைப் பிடிப்பதற்கு மகுடி வைத்து ஊதுவதைப்போல் இருந்தன. மகுடிக்கு வசப்பட்டு ஆடுகிற பாம்பு போல் ஆகிவிட்டாள் தங்கம் அவள் தன் நிலையில் இல்லாதவளாய், அவர் சுண்டிவிட ஆடுகின்ற விசைப் பொ ம் ைம பா ப் இயங்கிக்கொண்டிருந்தாள், கண்கள் தரையை நோக்கக் கால் பெருவிரல் மண்ணைத் தோண்ட, வெட்கத்தோடு குனிந்து நின்று கொண்டு, நினைத்த நெஞ்சு மகிழ, சொல்லும் வாய் மகிழ அத்தான் கந்தரேசன்' என்ற வார்த்தைகளை இனிமையான குரலில் இசைத்தாள். அந்தப் பெயரைக் கேட்டதும் அண்ணாமலைப் பண்டிதர் பாம்பை மிதித்ததுபோல் திடுக்கிட்டுப் போனார் என்ன? அவனையா? அந்த அயோக்கியனையா? அந்தக் கூத்திக் கள்ளனையா நீ காதலிக்கிறாய்? தங்கம் உனக்கென்ன பைத்தியமா?’ என்று சீறினார் அவர். இவ்வளவு நேரமும் முற்றிலும் புதிய மாதிரியாக நடந்து கொண்ட பண்டிதர் இப்போது பழையபடி சீற்றமே உருவாக மாறியதைக் கண்ட தங்கம் அஞ்சித் தலை நிமிர்ந்து அவரை நோக்கினாள். அண்ணாமலைப் பண்டிதரின் உதடுகள் து டி த் த ன . அவருடைய உறுப்புக்கள் ஒவ்வொன்றும் நடுங்கின. அவருடைய நெற்றியில் வியர்வை யரும்பி நின்றது. கண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/132&oldid=854237" இலிருந்து மீள்விக்கப்பட்டது