பக்கம்:மன ஊஞ்சல்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 123 நன்றாகச் சிவந்துவிட்டன. அவர் ஏதோ சிந்திப்பவர்போல் வானத்தை நோக்கிக்கொண்டு நின்றார். பிறகு தங்கத்தைக் கூர்ந்து நோக்கினார். பையப் பைய அவருடைய சீற்றம் தனிந்தது. பிறகு மறுபடியும் சாந்த உருவினராய், மாறி விட்டார். "தங்கம், உன் மனத்தைப் புண்படுத்திவிட்டேனா?” என்று வருத்தப்படுபவர் போல் கேட்டார். தங்கம் அவர் முகத்தை ஆவலுடன் நோக்கினாள். "மகளே, நான் சுந்ரேசனைப்பற்றி ஒரு மாதிரியாகச் சொல்கிறேனென்று எண்ணாதே! அவனுக்கு ஏற்கனவே ஒரு மனைவியிருக்கிறாள். போதாக் குறைக்கு வைப்பாட்டி வேறு வைத்திருக்கிறான். அதுவும் போதாதென்று, பாவம், ஒன்றும் அறியாத பேதைப் பெண்ணாகிய உன் வாழ்வையும் கெடுக்கத் திட்டமிட்டுவிட்டான் போலிருக்கிறது! மகளே, உன்னை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன், நீ அவனுடைய வெறிக்கு இரையாகி விடாதே!’ என்று சொன்னார் அண்ணாமலைப் பண்டிதர். இந்த எச்சரிக்கை மொழிகள், தங்கத்திற்கு ஒருவிதமான சந்தேகத்தை எழுப்பின. ஆனால் அண்ணமலைப் பண்டிதர் தொடர்ந்து சொன்ன வார்த்தை கள் அவளுடைய சந்தேகத்தைக் களைந்துவிட்டன.

  • தங்கம், நீ நடராசனை மணந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் சுந்தரேசன் மீது அவதூறு சொல்லுவ தாக எண்ணாதே! நடராசனை மணப்பதும் மணவாமல் இருப்பதும் உன் விருப்பம். கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்கும் அறிவினர்களின் கொள்கையை நான் ஆதரிப்பவனல்ல. ஆனால், கண்ணை மூடிக்கொண்டு கட்டாந்தரையில் முட்டிக்கொள்ளும் குருட்டுத் தனத்தை வெறுப்பவன் நான். மகளே, சுந்தரேசனைப்பற்றி நான் சொல்லுகிற வார்த்தை ஒவ்வொன்றும் உண்மை. இதை விரைவில் நான் உனக்கு மெய்ப்பித்துக் காட்டுவேன். என்ன
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/133&oldid=854238" இலிருந்து மீள்விக்கப்பட்டது