பக்கம்:மன ஊஞ்சல்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மன ஊஞ்சல் ஆனாலும் சுந்தரேசனிடம் நீ பற்று வைக்காதே! அவனை மனிதனாக நீ மதிக்கவே கூடாது. அவன் மனிதத் தன்மையே யில்லாதவன்! மிருகங்களுக்குள்ள ஒவ்வொரு நற்குணங்கள் கூட இல்லாதவன். மிகவும் பொல்லாதவன். மான அவமானம் பாராதவன்! தன்னுடைய சுகத்தையே பெரிதாகக் கருதுவானேயல்லாமல், மற்றவர்கள் எப்படிப் போனாலும் சரியென்று எண்ணுபவன். அவன் வலையில் நீ விழுந்து விடாதே! மகளே! இந்தப் பயங்கர மிருகத்திடமிருந்து நீ தப்பிவிட்டாய் என்ற நிலை ஏற்பட்டால்தான் எனக்கு அமைதி ஏற்படும். உன் தாய் தந்தையருக்கு இப்போது இருக்கின்ற அமைதி போகாமல் இருக்கும்! தங்கம் நான் சொல்வதைக் கேள்! உன் நன்மைக்காகச் சொல்லுகிறேன்: உன் குடும்ப கெளரவத்துக்காகச் சொல்லுகிறேன். இனி அவனை மனத்தாலும் நினைக்காதே!' படபடவென்று சொல்லிவிட்டு அண்ணாமலைப் பண்டிதர் விடுவிடுவென்று வீட்டை நோக்கிச் சென்றுவிட்டார். தங்கம் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். அண்ணாமலைப் பண்டிதர் அத்தான் சுந்தரேசன் மேல் ஏன் இத்தனை தூரம் வெறுப்பாகப் பேசுகிறார் என்று அவள் எண்ணிப் பார்த்தாள், சில சமயம் அவர் டேச்சைக் கேட்ட போது ஆம்! அவர் சொல்வது உண்மைதான்’ என்று தோன்றியது. சில சமயம், சேசே! அப்படியிருக்காது!' என்று தோன்றியது இருந்தாலும், தன் உள்ளத்தில் பதிந்துவிட்ட அத்தான் சுந்தரேசன் உருவத்தை அவளால் நீக்க முடிய வில்லை. அண்ணாமலைப் பண்டிதர் போவதையே பார்த்துக் கொண்டிருந்த தங்கம், அவர் வீட்டுக்குள் சென்று மறைந்ததும் தரையில் சிறிது நேரம் உட்கார எண்ணிக் குனிந்த போது அவள் தோளை யாரோ பிடிப்பது போலிருந்தது, தங்கம் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/134&oldid=854239" இலிருந்து மீள்விக்கப்பட்டது