பக்கம்:மன ஊஞ்சல்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I06ór ஊஞ்சல் 15. "தங்கம் உன் தங்க நகைகளைக் கொண்டுவா!' தோளை யாரோ பிடிப்பதை உணர்ந்து திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்த தங்கம், அத்தான் சுந்தரேசனைக் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தாள்! "ஆ! அத்தான்!' என்று கூச்சலிட இருந்த அவள் வாயைச் சுந்தரேசன் தன் கையால் மூடிவிட்டான். உணர்ச்சிப் பெருக்கம் படிப்படியாகக் குறைந்து தங்கம் அமைதியான நிலையை அடைந்த பிறகுதான் சுந்தரேசன் தன் கையை எடுத்தான். தங்கம் அவனை ஆவலோடு பார்த்துக் கொண்டே, அத்தான்! உங்கள் நடவடிக்கைக ளெல்லாம் மர்மமாகவும் வியப்பாகவும் இருக்கிறதே! அன்று திடீரென்று புறப்பட்டுப் போனிர்கள்! இன்று திடீரென்று இங்கே வந்து தோன்றுகிறீர்களே!’ என்று கேட்டாள் தங்கம். "தங்கம், நீதானே திடீரென்று காணாமற் போய் விட்டாய்! பிறகு எப்படியோ திரும்பி வந்துவிட்டாய்! அன்று உன்னிடம் சொல்லிக்கொண்டு போகாததை நினைத்து நான் எவ்வளவு வாத்தப்பட்டேன் தெரியுமா!' என்று பதிலளித் தான் சுந்தரேசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/135&oldid=854240" இலிருந்து மீள்விக்கப்பட்டது