பக்கம்:மன ஊஞ்சல்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மன ஊஞ்சல் தங்கம் அவனைக் கூர்ந்து நோக்கினாள்: அத்தான் சுந்தரேசனின் அழகிய உருவத்தை நோக்க நோக்க அவளுக்குச் சற்றுமுன் அண்ணாமலைப் பண்டிதர் கூறிய கடுமையான எச்சரிக்கை மொழிகளெல்லாம் மறந்து போய் விட்டன. சுந்தரேசனுடைய கையிரண்டையும் பிடித்துக் கொண்டே, ஆர்வம் நிறைந்த புறாப்பறக்கும் இருவிழி களாலும் அவனைப் பார்த்துக் கொண்டே, "அத்தான்!” என்று இழுத்துச் சொல்லி ஒரு பெருமூச்சு விட்டாள் தங்கம், அவளுடைய காதல் இப்போது புது மெருகேறியிருந்தது, நடராசனை ராதா காதலிக்கிற செய்தியையறிந்த பிறகு, அவள் எவ்வளவு தூரம் அவனை மேலாக எண்ணுகிறாள் என்பதைக் கண்ட பிறகு அவளுக்கு அத்தான் சுந்தரேசனைப் பார்க்கப் பார்க்க ஆர்வம் பொங்கி எழுந்தது. அந்த ஆர் வத்தின் பொங்கல் காரணமாக அவளுடைய நெஞ்சு ஏறி இறங்கியது. அவள், தன்னை நோக்கிய பார்வையையும் அதில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த காதலையும் விம்மி எழுந்த அவளுடைய மார்பகத்தையும், அதில் கனலாய்த் தகித்துக்கொண்டிருந்த காதல் உணர்ச்சியையும் கண்டு கொண்ட சுந்தரேசன், அவள் வகையாகத் தன்னிடத்தே அகப்பட்டுக் கொண்டாள் என்பதையறிந்து மெல்லப் புன்னகை புரிந்தான். அவனுடைய புன்னகையைக் கண்ட தங்கம் அதன் உட் பொருளை யறியாமல் அவன் தன்னைப் பதிலுக்குப் பதில் காதலிப்பதன் அறிகுறியாக அதை எண்ணிக்கொண்டு மேலும் அவன்மீது அன்பைப் பொழியத் தயாரானாள். தன்னிடம் வசமாகக் காதல் வலையில் சிக்கிக்கொண்ட தங்கத்தை ஆட்டிப் படைக்க முடிவு கட்டிக் கொண்டான் சுந்தரேசன். "தங்கம்! உண்மையில் நீ என்னைக் காதலிக்கிறாய் அல்லவா?’ என்று கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/136&oldid=854241" இலிருந்து மீள்விக்கப்பட்டது