பக்கம்:மன ஊஞ்சல்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் . 127 "ஆம்!’ என்று சொல்லிவிட வேண்டுமென்று தங்கத்தின் இதயம் துடித்தது. ஆனால், அவளுடைய நாணமும் அடக்கமும் எதையும் திடீரென்று செய்துவிடாத இயல்பான தன்மையும் சேர்ந்து அந்தச் சம்மதச் சொல்லைச் சொல் லாமல் செய்து விட்டன. சில சமயங்களில் நம் உணர்ச்சி கள் எப்படி நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றுகின்றன என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். வழியில் பாம்பு குறுக்கே ஒடுவதைக் காண்பவன், 'ஐயோ! பாம்பு!" என்று அலற எண்ணு வான். ஆனால், குரல் வளையை விட்டு அந்தச் சத்தம் வெளிப்படாது. அவனுடைய மிதமிஞ்சிய பயத்தின் காரணமாக வாய் ஒலியெழுப்பும் சக்தியை இழந்துவிடுகிறது. அது ஒருவகையில் நன்மையாக முடிந்து விடுகிறது! அவன் கூச்சலிட்டிருந்தால், தன் வழியில் போய்க்கொண்டிருந்த அந்தப் பாம்பு அவன் மீது சீறிப்பாய்ந்து தீண்டிக் கொன்றுவிடவும் நேரிடக்கூடும். அது போல்தான் எப்போதாவது வீட்டில் கன்னக்கோல் போட்டு நுழைந்த திருடர்களைக் காணுகிறபோது, மூலையில் முடங்கிப் படுத்துக் கொண்டிருக்கும் வேலைக்காரன், "ஐயோ திருடன்! திருடன்!' என்று கத்தி உறங்குபவர்களை எழுப்ப எண்ணுவான். ஆனால், திருடர்களைத் திடுமென்று கண்ட உணர்ச்சியால், அவன் வாய் திறந்த போதிலும் சத்தம் வெளிப்பட்டுத் தோன்றாது. அச்சம் சிறிது குறைந்து அவன் கத்தியிருப்பானேயானால், மூலையில் முடங்கிக் கிடந்த அவனைக் கவனிக்காமல் இருந்த திருடர்கள் கவனிக்க முற்பட்டு, அவனுடைய சத்தத்தை நிறுத்துவதற்காகச் சமயத்தில் கொன்று போட்டுக்கூட விடுவார்கள். அப்போது மிதமிஞ்சி ஏற்படுகிற அந்த உணர்ச்சி அந்த வேலைக்காரனை அடி வாங்காமலோ, கொலையுண்ணாமலோ காப்பாற்றி விடுகிறதென்றுதான் சொல்ல வேண்டும். அதுபோலத்தான் தங்கத்தின் இதயத்தில் எழுந்த மிதமிஞ்சிய காதல் உணர்ச்சி, “ஆம் நான் உ ங் க ைளக் காதலிக்கிறேன்." என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/137&oldid=854242" இலிருந்து மீள்விக்கப்பட்டது