பக்கம்:மன ஊஞ்சல்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 129 அவர் கொண்ட மனைவியையும், பெற்ற பிள்ளையையும் விட்டுவிட்டு ஓடிவந்து தன்னந்தனியாக உண்டு திரிந்துவரு கிற ஒரு சந்தியாசிதான்! வாழத்தெரியாத அவரிடத்திலே வாழத்துடிக்கின்ற நாம் உபதேசம் கேட்டால் எப்படியிருக் கும். காதல் என்பதையே வாழ்க்கையில் அனுபவியாமலும் உணராமலும், கடவுளே கதியென்று கிடக்கின்ற அவரைப் போன்ற மரக்கட்டைகளுக்கு வேண்டுமானால் அவருடைய உபதேசம் சரியாகப் பொருந்தலாம். நமக்கும் அவருக்கும் வெகுதுரம். புதுயுகம் காணத் துடிக்கும் இளைஞர் களிடையே இந்தப் பழங்கிழங்கள் மிகப் பழங்கருத்துக் களைப் புகுத்த முயல்கின்றன. நன்மை நலம் உதவி என்ற பல பெயர்களால் இன்பவாழ்வுக்கு இடையூறு செய்கின்ற இத்தகைய பெரிய மனிதர்களைக் கண்டாலும் எனக்குப் பிடிப்பதில்லை, நீ என்ன நினைக்கிறாய் தங்கம்?" என்று கேட்டான் சுந்தரேசன். தங்கம்தினைப்பதற்கு என்ன இருக்கிறது? அவன் நினைத் தோ நினைக்காமலோ சொன்னவற்றை யெல்லாம் தானும் அப்படியே நினைப்பதாகத்தான் அவள் எண்ணினாள். அவன் சொல்லுவதையெல்லாம் ஏற்றுக் கொண்ட பாவனையில் அவள் பேசாமல் நின்றாள். அவன் இந்த வகையில் அண்ணாமலைப் பண்டிதரின் கருத்தை அவள் சிறிதுகூட ஏற்றுக்கொள்ளாதபடி செய்து விட்டோம் என்று மனநிறைவு கொண்டான். பிறகு, அவன், அவளைத் தன்வயப்படுத்தத்தக்க காதல் பேச்சுக் களை மெல்ல மெல்லப் பேச ஆரம்பித்தான். அவனுடைய இனிமையான அந்தப் பேச்சுக்கள், பூவின்மேல் உட்கார்ந்து தேன் குடிக்கவந்த வண்டின் ரிங்கார இன்னிசை போல் அவளுடைய செவிகளிலே இன்பச் சுவையை உண்டாக்கின மதுக்குடித்த மயக்கத்தில் சுழலுகின்ற நிலையில் அவள் 9 سLo

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/139&oldid=854244" இலிருந்து மீள்விக்கப்பட்டது