பக்கம்:மன ஊஞ்சல்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மன ஊஞ்சல் விதிப்படி நடக்கட்டும் என்று பேசாமல் இருந்துவிட்டார் கந்தசாமி வாத்தியார். ஆங்காலம் வந்தால் யாவும் தானாக நடக்கும் என்று அவர் தன் மனத்திற்குள் சமாதானம் கூறுக்கொள்வார். நெடுநாளைக்குப் பிறகு மறுபடியும் அவர் தங்கத்தின் திருமணத்தைப் பற்றி நினைக்க-அதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எண்ண ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்தச் சந்தர்ப்பம் ஏற்பட்டபோது விதிதான் தன்னை இப்படித் துரண்டுகிறதோ என்று கூட எண்ணினார். கந்தசாமி வாத்தியார் வேலை பார்த்த நெய்யூர் தொடக்கப் பள்ளியில் முருகேசர் என்று ஒரு புதிய ஆசிரியர் வந்து சேர்ந்திருந்தார். அவர் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு ஆண்டாகி வி ட் ட து. அவரும் கந்தசாமி வாத்தியாரும் மிகவும் அன்பாக நெருங்கிப் பழகினார் கள். ஒருவர் குணம் ஒருவருக்குப் பிடித்துப்போய் விட்டது. ஒரு நாள் அந்த முருகேசர் கந்தசாமி வாத்தியாரைப் பார்த்துப் பேசும் பொழுது, 'கந்தசாமி, எத்தனை நாளைக்கு உன் பெண்ணை இப்படியே வைத்துக் கொள்ளப் போகிறாய்?’ என்று கேட்டார். 'முருகேசரே, என் நிலை தெரியாதவர் போல் பேசுகிறீர் களே?” என்றார் கந்தசாமி. "தெரியாமல் பேசவில்லை, இதோ பார். உன் பெண் ணுக்கும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை. என் பையனுக்கும் பெண் கிடைக்கவில்லை. நான் இவ்வளவு துணிந்து கேட் கிறேனே என்று கோபப்படாதே! உள்ள நிலைமையைத்தான் சொல்கிறேன். எனக்குத் தஞ்சாவூரில் நிலம் இருக்கிறது என்பதும், நெல் விளைந்து வருகிறது என்பதும், உனக்குத் தெரியும். அது ஒரு குடும்பத்திற்கு வருடம் முழுவதும் சாப்பாட்டுக்குப் போதும், திருமணத்திற்காக ஒன்றும் செல வழிக்க வேண்டாம். நெய்யூர் முருகனுக்கு ஒர் அபிசேகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/14&oldid=854245" இலிருந்து மீள்விக்கப்பட்டது