பக்கம்:மன ஊஞ்சல்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மன ஊஞ்சல் இருந்தாள். சுந்தரேசன் சொல்லிய இனிய காதல் மொழிகள் அவளிடம் அப்படிப்பட்ட ஒருவிதமான மயக்க உணர்வை உண்டாக்கின. நெடு நேரம் அவனுடன் பேசிக்கொண்டு அந்த இன்ப நிலையிலேயே இருந்த தங்கம், கடைசியில் வீட்டு நினைவு வந்தவளாய் "அத்தான், வாருங்கள்! வீட்டுக்குப் போவோம்!” என்று அழைத்தாள். ஆனால், சுந்தரேசன், அவளைப் பார்ப்பதற்காக வந்தானே தவிர, அவளுடைய வீட்டுக்குள் போக வரவில்லை. அதுவும், அண்ணாமலைப் பண்டிதர் முகத்தில் விழிக்க அவனுக்கு அப்போது துணிவு மில்லை. அத்தனை நிகழ்ச்சிகள் சென்னையிலே நடை பெற்றிருக்கின்றன. இல்லை. தங்கம், நான் இப்பொழுது அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது இன்னொரு முறை வருகிறபொழுது அப்பா அம்மாவைச் சந்திக்கிறேன்' என்றான் சுந்தரேசன். . "என்ன? இன்னொரு முறையா? அப்படியானால், இப் போது நீங்கள் போனால் எப்போது திரும்பி வருவீர்கள்?’: என்று வேதனையோடு கேட்டாள் தங்கம். 'கூடிய சீக்கிரம்! ஏன், நாளைக்கே திரும்பி வருகிறேன் தங்கம்' என்று சொல்லி அவளைக் குறிப்பாக உற்று நோக்கினான் சுந்தரேசன். அந்த ஒரு நாள் பிரிவைக்கூடத் தாங்கமுடியாது போலிருந்தது அவளுக்கு என்பதை அவளுடைய முகத் தோற்றத்தைக் கொண்டே புரிந்து கொண்டான் சுந்தரேசன். . பிறகு ஆறுதல் கூறுபவன்போல் சுந்தரேசன், ‘என்ன, தங்கம். நாளைக்கேதான் திரும்பி வந்துவிடப் போகிறேனே? இதற்கென்ன இப்படி மலைக்கிறாய்?' என்று இதமாகச் சொன்னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/140&oldid=854246" இலிருந்து மீள்விக்கப்பட்டது