பக்கம்:மன ஊஞ்சல்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 13| தங்கம் ஒருவாறு மனம் தேறினாள். பிறகு சுந்தரேசன். அவளிடம்-மறுபடியும் ஆறுதலாகப் பல வார்த்தைகள் சொல்லி விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான். நான்கைந்தடி போனபின், அவன் மீண்டு திரும்பி வந்து, 'தங்கம். 1" என்று இழுத்துக்கொண்டு நின்றான். என்ன வேண்டும் என்று கேட்பது போல் 'அத்தான்...?’’ என்றாள் தங்கம். 'தங்கம்...நீ எனக்கோர் உதவி செய்வாயா?' என்று தயங்கித் தயங்கிக் கேட்டான் சுந்தரேசன். "என்ன உதவி அத்தான்? சொல்லுங்கள் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!' என்றாள் தங்கம். இல்லை. வேண்டாம். வேண்டாம். உன்னால்முடியாது, உனக்கு ஏன் வீண் தொல்லை?' என்று தான் அவளிடம் தவறுதலாகப் பே ச் ைச ஆரம்பித்துவிட்டவன்போலப் பேசினான் சுந்தரேசன். - "அத்தான், சொல்லுங்கள் என்னால் முடிந்தவரை நான் உங்களுக்கு உதவாமல் இருப்பேனா? என்ன கஷ்டம்? என்ன ஆபத்து எதற்காக என் உதவியை எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்டான் தங்கம். - - - 'தங்கம்! உள்ளபடிதான் சொல்லுகிறாயா? உன்னிடம் நான் உதவியை எதிர்பார்க்கலாமா?’ என்று மறுபடியும் கேட்டான் சுந்தரேசன். "என்ன அத்தான்? திரும்பத் திரும்ப இப்படியே சந்தேகப்பட்டுக் கொண்டு?’ என்று பரிவோடும், தன் காதலனுக்குத் தான் ஒரு தன்மை செய்ய வாய்ப்புக் கிடைக்கப் போகிறதே என்ற நம்பிக்கையோடும் கேட்டாள் தங்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/141&oldid=854247" இலிருந்து மீள்விக்கப்பட்டது