பக்கம்:மன ஊஞ்சல்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மன ஊஞ்சல் 'தங்கம், ஒன்றுமில்லை. அவசரமாக ஒர் இரண்டாயிர ரூபாய் வேண்டும். மிக அவசரம். அதற்காகத்தான் நான் திடீரென்று சென்னைக்குப் போனேன். நீ ஏதாவது உதவி செய்வாயா என்று முதலில் எதிர்பார்த்தேன். பாவம் நீ ஒரு சின்னப் பெண். உன்னால், இவ்வளவு பெரும் தொகை எப்படிக் கொடுக்க முடியும்?' என்று சொன்னான் சுந்தரேசன். "அத்தான், வீட்டுக்கு வாருங்கள் அத்தான். அப்பா விடம் சொன்னால் எப்படியாவது, யாரிடமாவது கேட்டு வாங்கித் தந்துவிடுவார். இன்னொருவர் துன்பத்தை அவர் பார்த்துப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார். வாருங்கள் அப்பாவிடம் கேட்டோம்.' - ‘பைத்தியம்! சின்னப்பெண் என்பதை அப்படியே காட்டிக் கொள்கிறாய். எனக்காக உன் அப்பா இவ்வளவு பெரிய பொறுப்பை எப்படி ஏற்றுக் கொள்ளுவார். பாவம்! அவரே அன்றாடம் செலவுக்குத் திண்டாடுகிறார், இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்ககூடிய நிலையில் இருந்தால், உனக்குத் தான் எப்போதோ திருமணம் நடத்தி முடித்திருப்பாரே!” என்றான் சுந்தரேசன். அவன் தன் அப்பாவைக் குறைவாகப் பேசியபோது தங்கத்திற்குத் துணுக்கென்றிருந்தது. ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், "வேறு என்னதான் செய்வது அத்தான்?’ என்று கேட்டாள். "சொன்னால், நீ செய்வாயா? செய்வாயானால்தான் சொல்லலாம்!” என்றான் சுந்தரேசன். "அத்தான்! வழியிருந்தால் சொல்லுங்கள்! நான் உங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்யக் காத்திருக் கிறேன்" 'உண்மைதானா தங்கம்? நீ சொல்வது உண்மை தானா?” என்று ஆவலாகவும் பரபரப்பாகவும் கேட்டான் சுந்தரேசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/142&oldid=854248" இலிருந்து மீள்விக்கப்பட்டது