பக்கம்:மன ஊஞ்சல்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 133 ஆமென்று தலையாட்டினாள் அவள். சுந்தரேசன் அவளைக் கூர்ந்து நோக்கினான். அவன் சிந்தனை பலமாக வேலை செய்து கடைசியாக ஒரு தீர்மனத்துக்கு வந்தது. 'தங்கம், உன் நகைகளைக் கொண்டு வந்து தந்தால், நான் அவற்றை அடைமானமாக வைத்து இப்போது ரூபாய் பெற்றுக்கொள்வேன். பிறகு எனக்கு ரூபாய் கிடைத்தவுடன் அந்த நகைகளைத் திருப்பித் தந்துவிடுவேன். கொண்டு வருகிறாயா தங்கம்?' என்று கேட்டான் சுந்தரேசன். “இவ்வளவுதானா? இதோ கொண்டு வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டே வீட்டை நோக்கி ஓடினாள் தங்கம். - "தங்கம்! தங்கம்! கொஞ்சம் நில்!” என்றான் சுந்தரேசன். தங்கம் நின்றாள். திரும்பிப் பார்த்தாள். 'யாருக்கும் தெரியாமல் எடுத்துவா!' என்று கட்டளை யிட்டான் சுந்தரேசன். தன் எண்ணம் மிக எளிதாக நிறை வேறப்போகிறது என்று எண்ணிக் கொண்டே. தங்கம் தயங்கினாள். 'என்ன தங்கம்? போய் எடுத்துவா!' என்று அவசரப் படுத்தினான் அவன். "தெரியாமல் எப்படி அத்தான் எடுத்து வருவது? என்று கேட்டாள் தங்கம். - "இதுகூடத் தெரியாதா? மண்டு யாரும் பாராதபோது புடவைத் தலைப்புக்குள்ளே மறைத்து, எடுத்துக் கொண்டு வா!' என்று செல்லமாக அதட்டி வழி கூறினான் சுந்தரேசன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/143&oldid=854249" இலிருந்து மீள்விக்கப்பட்டது