பக்கம்:மன ஊஞ்சல்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மன ஊஞ்சல் "அது சரி, அத்தான். ஆனால், அம்மாவுக்குக்கூடவா தெரியாமல் எடுத்து வரவேண்டும்?' என்று கேட்டாள். அவள். - 'ஆம்! யாருக்கும் தெரியக்கூடாது!’ என்று பதிலளித் தான் சுந்தரேசன். - "அது எப்படி முடியும்? அம்மாவிடம் தானே எல்லா நகையும் இருக்கிறது!" என்று தங்கம் சொன்னாலும் சொன்னாள் சுந்தரேசன் முகத்தில் அசடு வழிந்துவிட்டது. இருந்தாலும் அவன் சமாளித்துக்கொண்டு, 'அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்துவர முடியாதா?’ என்று கேட்டான் "அத்தான் உங்களுக்குப் பணம் வேண்டும். அதைப் பெற நகை வேண்டும். அவ்வளவுதானே? அம்மாவிடம் கேட்டே வாங்கிக்கொண்டு வருகிறேன். அம்மா நான் கேட்டால், அதுவும் உங்களுக்காக என்று கேட்டால் மறுத்துரைக்கவே மாட்டாள் என்று சொன்னாள். ‘'வேண்டாம் தங்கம்! வேண்டாம். உன் நகைகள் எனக்கு வேண்டவே வேண்டாம்!” என்று சொன்னான் சுந்தரேசன். "ஏன் அத்தான்! என்மேல் கோபமா' என்று தங்கம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, சுந்தரேசன் செடிகளின் பின் மறைந்து வீதியை நோக்கி நகர்ந்து சென்றுகொண்டிருந் தான். அவன் செயலுக்குக் காரணம் தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தாள் தங்கம். அவள் திகைப்படங்க வெகு நேரமாயிற்று. அவள் வீட்டிற்குள் திரும்பவும் நுழைந்தாள். அங்கே யாரோ ஒரு புதுப்பெண், அவள் இதுவரை முன் பின் பார்த் திராத ஒர் அயலூர்ப்பெண், தன் தாயாருடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அந்தப் பெண் அடிக்கடி அழுவதும் கண்ணிர் சிந்துவதும் முக்கைத் துடைப்பதுமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/144&oldid=854250" இலிருந்து மீள்விக்கப்பட்டது