பக்கம்:மன ஊஞ்சல்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 135 இருந்ததையும் மரகத அம்மாள் அவளின் கதையைப் பரி வோடும் இரக்கத்தோடும் கேட்டுக்கொண்டிருப்பதையும் அவள் கண்டாள். அந்தப் புதிய பெண் சொன்ன பரிதாபக் கதையைத் தங்கமும் கூட இருந்து கேட்டாள். அந்தப் பெண் தன் கணவனைப் பற்றியே குறை கூறிச் சொல்லிக் கொண்டிருந்தாள். தங்கத்திற்கு இது பிடிக்கவில்லை. எந்தப் பெண்ணும் தன் கணவன் எவ்வளவு தீயவனாயிருந்த போதிலும் அவனைப் பற்றிப் பிறரிடம் குறைகூறக் கூடா தென்பது தங்கம் கொண்டிருந்த கொள்கை. கணவனைக் குறைத்து மதிப்பிடுகிற பெண்கள் வாழ்க்கை வளம்பெறாது. நலமும் பெறாது என்பது அவளுடய சிந்தாந்தம். இருந் தாலும், அந்தப்பெண் சொன்ன செய்திகள் உள்ளம் உருக்கு வன வாய் இருந்தபடியால் அவள் ஆதரவான முறையில் இரக்கங்காட்டியும் இடையிடையே இச்சுக் கொட்டியும் தன் தாயோடு சேர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் சொன்ன கதை இதுதான்! "அவருக்கும் எனக்கும் பத்து ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. என்னைப் பெண் பார்க்க வந்தபோது அவருடைய அழகான முகத்தைப் பார்த்துவிட்டு நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. என் தோழிப் பெண்களெல்லாம் நான் பெரிய அதிர்ஷ்டசாலியென்று கூறினார்கள். இப்படி இன்பக்கனவுகள் கண்டு கொண்டே வாழ்க்கையை ஆரம்பித்த நாள் இரண்டொரு மாதங்களி லேயே வாழ்வை வெறுக்கத் தொடங்கிவிட்டேன். காரணம் அவரும் அவருடைய போக்குந்தான். அவர் சினிமாவில் சில்லரை வேடம் போடும் ஒரு நடிகையைச் சுற்றிக் கொண்டே திரிந்தார். அவளையே வைப்பாட்டியாகவும் வைத்துக்கொண்டார். என்னிடம் இருந்த நகை பகை எல்லா வற்றையும் வாங்கியும் பறித்தும், திருடியும் கொண்டு போய் அடிமானம் வைத்தும், விற்றும் சூதாடியும் குடித்தும் பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/145&oldid=854251" இலிருந்து மீள்விக்கப்பட்டது