பக்கம்:மன ஊஞ்சல்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மன ஊஞ்சல் களிடம் கொடுத்தும் குடித்தனத்தைக் கெடுத்துவிட்டார். என் மாமியாரோ பெரிய பிடாரி. அவள் எப்போதும் தன் மகனை உயர்த்தியே பேசுவாள். நான் அடி வைத்ததுமுதல் தன் வீடு உருப்படவில்லை என்று என்னை ஏசுவாள், அவருடைய அரட்டும் உருட்டும் தாங்கமுடியாமல் நான் என் தாய் வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். இப்போது ஏழெட்டு ஆண்டுகளாக நான் தாய் வீட்டிலேயேதான் வாழா வெட்டியாக இருந்து வருகிறேன். அவர் அந்த சினிமாக் காரியோடு திரிவதும், அவளுக்காக வேலை செய்வதுமாக அலைந்துகொண்டிருந்தார். கடைசியில் அவளும் அவரிடம் இருந்த பணத்தையெல்லாம் கரைத்துக் குடித்துவிட்டு இப் போது, மேற்கொண்டு பணம் கொண்டு வந்தால் தான் ஆச் சென்று மிரட்டுகிறாளாம். இனிமேலாவது அவருக்கு நல்ல புத்தி சொல்லி, என்னுடன் குடித்தனமாக வாழும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். உங்களைத் தான் நம்பி வந்திருக் கிறேன்' என்று சொன்னாள் அந்தப் பரிதாபத்திற்குரிய பெண் . 'அம்மா! உன் கணவர் யார்? அவர் எங்கேயிருக்கிறார் நாங்கள் அவருக்குப் புத்திமதி சொன்னால் கேட்பாரா' என்று ஐய வினாக்களை எழுப்பினாள் மரகத அம்மான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/146&oldid=854253" இலிருந்து மீள்விக்கப்பட்டது