பக்கம்:மன ஊஞ்சல்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tD6f ஊஞ்சல் 16. மீனாட்சி திருக்குணங்கள் 'அம்மா! உங்கள் அண்ணன் மகன் உங்கள் பேச்சைக் கேட்காமலா இருப்பார்? உங்கள் மேல் அ வ ரு க் கு அளவில்லாத அன்புண்டாமே! இப்போது கூட அந்தச் சினிமாக்காரியின் தொந்தரவுக்குப் பயந்து அவர் இங்கே உங்கள் வீட்டில் தானாமே பல நாட்களாக இருந்து வருகிறார். அம்மா! நீங்கள் நல்லாயிருப்பீர்கள். என்னை உங்களுடைய இன்னொரு மகளாகப் பாவித்து அவருக்குப் புத்திமதி சொல்வி என்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும். உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இப்போதே என் வாழ்க்கையில் ஏழெட்டு ஆண்டுகள் வெறும் பாலைவனமாகக் கழிந்து விட்டன.' என்று கூறிக் கண்ணிர் விட்டாள் அந்தப் பெண். ‘'நீ என்ன சொல்கிறாய்? எனக்கொன்றும் புரிய வில்லையே!' என்று மரகத அம்மாள் குழம்பினாள், "அம்மா! உங்கள் கூடப் பிறந்த அண்ணன் வீட்டு மருமகள்தான் தான். என்னை என் கணவருடன் சேர்த்து வாழவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அது உங்களால் முடியும்-உங்கள் ஒருவரால் தான் முடியும்!’ என்று மரகத அம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டாள் அந்தப் பெண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/147&oldid=854254" இலிருந்து மீள்விக்கப்பட்டது