பக்கம்:மன ஊஞ்சல்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மன ஊஞ்சல் "என்ன? உண்மையாகவா? நீ சுந்தரேசன் மனைவியா? நீ திருமணமாகி ஆறாவது மாதத்திலேயே இறந்து போய் விட்டாய் என்றல்லவா சொன்னான்?' என்று தன் ஐயத்தை வெளிப்படையாகவே கேட்டாள் மரகத அம்மாள். இதைக் கேட்ட அந்தப் பெண், 'ஆ! அப்படியா சொன்னார்?' என்று கேட்டுவிட்டுக் கோவென்று கூவியழத் தொடங்கி விட்டாள். அவள் தன் அத்தான் சுந்தரேசன் மனைவி என்பதை அப்போது தான் அறிந்துகொண்ட தங்கத்திற்கு ஒரேஅதிர்ச்சி யாயிருந்தது, அந்த அதிர்ச்சி தாங்க மாட்டாமல் அவள் சுவரின் மேல் சாய்ந்து கொண்டு, அந்தப் பெண்ணையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணைப் பார்க்கப் பார்க்க அவளுடைய மனச் சுழற்சியின் வேகம் அதி கரித்துக் கொண்டே போயிற்று! அண்ணாமலைப் பண்டிதர் தக்க சமயத்தில் தன்னை எச்சரிக்க முன் வந்திருக்கிறார் என்பது அவளுக்கு அப்போது தான் புலப்பட்டது. தான் படுகுழியில் வீழ்ந்து பாழாகி விடாமல் காக்கவே அவர் நேரம் பார்த்துத் தன்னிடம் விஷயத்தைக் கூற வந்திருக்கிறார் என்று அவளுக்குத் தோன்றியது. இருந்தாலும், அத்தான் சுந்தரேசன் மீது அவளுக்கேற்பட்டிருந்த பற்று உடனடியாக விலகிவிடக் கூடியதாக இல்லை. அது மட்டுமல்லாமல், அது அவள் மனோ சிந்தனையை வேறு பாதையில் திருப்பிவிடக் கூடிய சக்தி வாய்ந்ததாகவுமிருந்தது. ஒருவேளை அண்ணாமலைப் பண்டிதருக்கு சுந்தரேசன் மீ து ள் ள வெறுப்புக் காரணமாக அவர் தன்னிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி யிருக்கலா மென்றும், அதுமட்டுமல்லாமல் தன் சொல்லை மெய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/148&oldid=854255" இலிருந்து மீள்விக்கப்பட்டது