பக்கம்:மன ஊஞ்சல்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 139 பிப்பதற்காக அவர் இந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து தன் அத்தானின் மனைவியாக நடிக்கச் செய்திருக் கலாம் என்றும் ஒர் எண்ணம் கூட அவளுக்கு இடையே ஏற் பட்டது. ஆனால், அந்த எண்ணம் நிலைபெற்றிருக்கவில்லை. அண்ணாமலைப் பண்டிதரின் பெரிய மனிதத் தன்மையும் பண்பும் அவன் இப்போது பல நாட்களாக நேரடியாகக் கண்டறிந்து வருகின்றபடியால், அவரை அவ்வளவு கீழ்த் தரமாகக் கருத அவளால் முடிய வில்லை, அதுவுமில்லாமல் கண்ணிரும் கம்பலையுமாகத் தன் தாயின் காலடியில் வீழ்ந்து கதறுகின்ற அந்தப் புதிய பெண்ணின் கூற்றை வெறும் நாடகம்-நடிப்பு என்று அவ்வளவு எளிதாகச் சொல்லி விடக் கூடியதாக இல்லை. மேலும் அவள் சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது சற்று முன் சுந்தரேசன் தன்னிடம் நடந்துகொண்ட முறை அவள் அவன் மீது கொண்டிருந்த மதிப்பை மேலும் குறைப் பதாகவேயிருந்தது. சுந்தரேசன் சொல்லுவ தெல்லாம் சுத்தப் பொய்யாக இருக்குமோ என்றுதான் தோன்றியது. தங்கத்தின் டினம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. ஒரு முறை சுந்தரேசன், வெறுப்புக்குரிய உருவமாகத் தோற்ற மளித்தான். மற்றொரு முறை சுந்தரேசன் விரும்புதற்குரிய வனாகத் தோன்றினான். அவன் இல்லாவிட்டால் தனக்கு வாழ்வில்லை என்று ஒரு கணம் அவளுக்குத் தோன்றியது. அவனோடு வாழும் நாளெல்லாம். கசப்பான நாட்களாகவே இருக்குமோ என்ற ஒரு பயம் அவளுக்கு ஒரு கணம் தோன்றியது. . r அண்ணாமலைப் பண்டிதருக்குச் சுந்தரேசன்மேல் ஏன் இவ்வளவு கோபமோ, ஏன் இவ்வளவு வெறுப்போ தெரிய வில்லை. அண்ணாமலைப் பண்டிதரும் சுந்தரேசனும் ஒரு வரைப் பற்றி ஒருவர் கூறிய கருத்துக்களைப் பார்த்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/149&oldid=854256" இலிருந்து மீள்விக்கப்பட்டது