பக்கம்:மன ஊஞ்சல்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 5 ஆராதனையைப்பண்ணி விட்டு அவன் சன்னிதானத்திலேயே திருமணத்தை முடித்து விடலாம். என்ன சொல்கிறாய்?" என்று கேட்டார், முன்னாலேயே யோசித்து முடிவுசெய்து விட்ட முருகேசர். - கந்தசாமி வாத்தியார் பதில் சொல்லத் தயங்கினார். ஒருவேளை, முருகப்பிரான்தான் முருகேசர் உருவத்தில்வந்து இந்த முடிச்சைப் போட முனைகிறானோ என்று அவர் உள்ளம் கருதியது. “கந்தசாமி ஏன் தயங்குகிறாய். எதற்கும் தங்கத்தை யும் கேட்டுவிடு, அவள் சம்மதம் என்று சொன்னால் மேற் கொண்டு இதைப் பற்றிப் பேசுவோம் இல்லாவிட்டால் வேண்டாம். இந்த விசயத்தில் உன் சம்மதம் மட்டும் எனக் குப் போதாது. தங்கமும் சம்மதித்தால்தான் நான் இந்த காரியத்தில் ஈடுபடுவேன். நாளைக்கு என் பிள்ளையோடு வாழ வேண்டியவள் அவள் அல்லவா?" என்று நியாயமான ரீதியில் பேசினார் முருகேசர். கந்தசாமி வாத்தியார் எதுவும் பதில் பேசவில்லை. "என்ன, தங்கத்தைக் கேட்டுச் சொல்கிறாயா?' என்று மறுபடியும் கேட்டார் முருகேசர். சரி' என்பது போல் தலையை ஆட்டினார் கந்தசாமி வாத்தியார். பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குத் திரும்பிய கந்தசாமி வாத்தியார் தயங்கித் தயங்கிக் கொண்டுதான் உள்ளே துழைந்தார். ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டு வரவேற்றாள் அவருடைய மனைவி மரகதம். "ஒன்றுமில்லை.லேசாகத் தலைவலி... தங்கம் எங்கே? கொஞ்சம் கூப்பிடு - வார்த்தைகள் விட்டு விட்டு வெளிப் பட்டன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/15&oldid=854257" இலிருந்து மீள்விக்கப்பட்டது