பக்கம்:மன ஊஞ்சல்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மன ஊஞ்சல் இருவருக்கும் எத்தனையோ ஆண்டுகளாக பகையிருக்கும் போல் தோன்றியது. யார் கூறுவது உண்மை, யார் கூறுவது பொய் என்று எளிதாகச் சட்டென்று கண்டுபிடிக்க முடியாது போலிருந்தது. ஆனால், சுந்தரேசன் குணம் அவளுக்குச் சின்ன வயது முதலே தெரியும் ஆகையாலும் அண்ணாமலைப் பண்டிதரைப் பற்றியும் அவளுக்கு மேலான கருத்துஏற்பட்டிருந்தபடியாலும் அவள் சுந்தரேசனைப்பற்றி. அவன் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடிந்தது. ஆனால், அவளுடைய மனத்தின் ஒருபகுதி அந்த முடிவை ஏற்றுக்கொள்ளத் தயங்கியது. என்ன இருந்தாலும் அவன் குற்றவாளி என்று அது ஒப்புக்கொள்ள மறுத்தது! இதோ எதிரில் இருக்கும் பெண்ணின் கண்ணிரைக் கண்ட பிறகுகூட, 'என் வாழ்வு பாலைவனமாகிவிட்டது; அதைச் சோலைவனமாக்க ஒரு வழிசொல்லுங்கள்' என்று தன் தாயின் காலடியில் விழுந்து கதறுகின்ற அந்தப் பெண்ணின் பரிதாபத் தோற்றத்தைக் கண்ட பிறகும்கூட, திருமணம் நடந்த ஆறு மாதங்களிலேயே செத்துப்போய் விட்டாள் என் மனைவி என்று அத்தான் சுந்தரேசன் கூறியிருக்க இல்லை, அவர் கொடுமையால் விரட்டியடிக்கப்பட்டு நடைப்பினமாக வாழ்ந்து வருகிறேன் என்று சோக உருவோடு வந்து நிற்கும் அந்த வாடியுலர்ந்த கொடிபோன்ற பெண்மணியைக் கண்ட பிறகும்கூட அவளால் தன் அத்தானை அலட்சியப் படுத்தி விட முடியவில்லை. அவ்வளவு துரத்திற்குச் சுந்தரேசன் அவள் இதயத்தில் இடம் பிடித்திருந்தான். இருந்தாலும் அவள் இனிமேல் அவனை மறந்துவிட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தாள். எத்தனைதான் தன் இதயத்தைக் கவர்ந்தவனாயிருந்தபோதிலும், எத்தனைதான் தன்னால் அவனின்றி வாழமுடியாது என்ற நிலையிருந்தபோதிலும், இன்னொரு பெண், அவனுக்கு வாழ்க்கைப்பட்டதன் காரண மாகத் தன் வாழ்வை விண் ஆக்குவதை அவள் விரும்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/150&oldid=854258" இலிருந்து மீள்விக்கப்பட்டது