பக்கம்:மன ஊஞ்சல்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 141 வில்லை. அந்தப் பெண்ணின் வாழ்வைக் கடைத் தேற்ற வேண்டியது தன் பொறுப்பு என்று அவளுக்குத்தோன்றியது. வாழ்க்கைப்படாத ஒரு பெண்ணாக அவள் இருந்திருந்தால், தன்னைப்போலவே சுந்தரேசனைக் காதலிக்கிறவளாக அவள் இருந்திருந்தால், தங்கம் அவள் மீது போட்டியுணர்ச் சியும் பொறாமையும்தான் கொண்டிருப்பாள். ஆனால் அவள் அவனைக் கணவனென்று கைப்பிடித்த பின் அவன். அவளுக்கே உரியவன் என்ற எண்ணம் தங்கத்திற்கு ஏற் பட்டது. பத்தாண்டுகளாக மணம் புரிந்தும் வாழ்வில்லாத நிலையில் வாடித் தவிக்கின்ற அந்தப் பெண்ணுக்குப் புதுவாழ்வு அளிக்கவேண்டியது தன் கடமை என்று தங்கம் உணர்ந்தாள். இத்தனை எண்ணங்களும் தன் இதயத்திலே எழுந்து எழுது தோன்றத் தங்கம் சுந்தரேசனைத் தன் காதலனாக இனி எண்ணுவதில்லை என்ற முடிவுக்கு வந்தாள். அப்படி முடிவுக்கு வந்தபோதும்கூட அவள் தான் எப்படி இந்த முடிவை நடை முறையில் கையாளுவது என்று புரியாமல் திண்டாடினாள். சுந்தரேசனுடைய அழகிய புன்னகையரும்பிய முகத்தை மனத்தால் எண்ணிப் பார்க்கும் போது கூட அவளுக்குத் தன்னால் அவனை ஒதுக்கிவிட்டு இருந்துவிட முடியாதென்றுதான் பட்டது. ஆனால், ஒர் அபலைப் பெண்ணின் வாழ்வு பாழாகப் போவதற்குத் தான் காரணமாக இருக்கக்கூடாதென்று அவள் உறுதி பூண்டாள். அதுவரையிலும் அந்தப் பெண்ணையே உற்றுநோக்கிக் கொண்டிருந்த தங்கம், திடீரென்று அந்தப் பெண்ணின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு நான் உங்களுக்கு உதவி செய்வேன். அத்தானை நான் உங்களிடம் சேர்த்து வைப்பேன்’ என்று உறுதியான குரலில் கூறினாள். தன்மகளின் இந்தத் திடீர்ச் செயலைக் கண்டு மரகத அம்மாள் அதிசயப்பட்டுப்பானாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/151&oldid=854259" இலிருந்து மீள்விக்கப்பட்டது