பக்கம்:மன ஊஞ்சல்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ம்ன ஊஞ்சல் 'அம்மா, சற்று முன்னால்தான் அத்தான் தோட்டத் திற்கு வந்திருந்தார். அவர் இப்போது ஏதோ பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறாராம். இரண்டாயிரம் ருபாய் இருந்தால் அதிலிருந்து தப்பிக்க முடியும் என்று சொன்னார். தங்கம் உன்னால் உதவி செய்ய முடியுமா? என்று கேட்டார்’ என்றாள் தங்கம். அதற்கு மேல் பேசிய விவரங்களை அவள் சொல்லத் துணியவில்லை. “எங்கே அவர்? இப்போது இங்கே தான் இருக்கிறாரா?: என்று அந்தப் புதிய பெண் ஆவலோடு கேட்டாள். 'இல்லை, பேசிக்கொண்டே யிருந்தார். திடீரென்று புறப்பட்டு விட்டார் என்ன காரணமோ தெரியவில்லை. என்னால் உதவி செய்ய முடியவில்லை, என்ற கோபமோ என்னவோ?’ என்று தங்கம் கூறினாள். 'ஆ இல்லை, உன்மேல் அவர் கோபம் கொண்டு போக வில்லை, நான் வீட்டுக்குள் வந்ததை அவர் கவனித்திருக்க வேண்டும். அதனால் தான் திடீரென்று போயிருக்கிறார்' என்று விளக்கம் சொன்னாள் அந்தப் பெண். தொடர்ந்து அவள், 'அந்தச் சினிமாக்காரிக்கு அள்ளிக் கொட்டு வதற்காகத்தான் அவர் ரூபாய் தேடிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி மட்டும் இல்லாமல் வேறு ஏதாவது ஆபத்தில் அவர் சிக்கிக் கொண்டிருந்தால், நான் நிச்சயம் என்னிடம் மிகுந்துள்ள நகைகளையாவது விற்றுக் கொடுக்கத் தயாராயிருக்கிறேன்." என்றாள். 'மீனாட்சி, நீ நினைப்பது சரிதான் அவன் அந்தச் சினிமாக்காரிக்காகத் தான் பணத்துக்கு அலைகிறான்' என்று மாடிப் பக்கம் இருந்து ஒரு குரல் வந்தது. பெண்கள் மூன்று பேரும் திரும்பிப் பார்த்தார்கள். அண்ணாமலைப் பண்டிதர் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரை முன்பிள் பார்த்தறியாத அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/152&oldid=854260" இலிருந்து மீள்விக்கப்பட்டது