பக்கம்:மன ஊஞ்சல்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 143 பெண், அவர் தன்னைப் பெயரிட்டு அழைத்துக் கொண்டு வந்ததையும், தன் கணவனைப் பற்றி அவ்வளவு உறுதியான தகவல் தெரிவிப்பதையும் கண்டு திடுக்கிட்டுப் போனாள், அண்ணாமலைப் பண்டிதருக்குத் தெரியாத விஷயமே இருக்காதோ என்று மரகதமும் தங்கமும் ஆச்சரியப் பட்டார்கள். - தங்கம், சுந்தரேசனைப் பற்றி நான் சொல்லிய செய்திகள் உண்மை யென்று மெய்ப்பிக்கிறேன் என்று முன் உன்னிடம் சொல்லியது நினைவிருக்கிறதல்லவா? இதோ பார். இந்த மீனாட்சி தான் அவனுடைய மனைவி, என்று சொன்னார் அண்ணாமலைப் பண்டிதர். அவருடைய பேச்சைக் கேட்டு மரகதம்மாள் மலைத்துப் போனாள். தங்கத்துக்குச் சுந்தரேசனைப் பற்றி ஏன்-எதை மெய்ப்பிக்க விரும்புகிறார் என்று எண்ணி அவள் குழம் பினாள். அந்தக் குழப்பம் ஏற்பட்டு அவள் மனம் கலங்கித் தெளிவடைந்தபோது அவளுக்கு உண்மை விளங்கத் தொடங் கியது. அதாவது தான் இதுவரை தங்கத்தைச் சரியாகக் கவனிக்கவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள். தன் கவனத்தை மீறித் தங்கம் சுந்தரேசனிடம் காதல் கொண்டு வந்திருக்கிறாள் என்பதை மரகதம்மாள் யூகிர்த்துணர்ந்து கொண்டாள். அண்ணாமலைப் பண்டிதர்-இதோ பார் இந்த மீனாட்சிதான் அவனுடைய மனைவி என்று கூறிய அந்த சொற்றொடர் அவளுக்குப் பலப் பலவற்றைப்புரியவைத்தது. தங்கம்-சுந்தரேசன் காதல் விவகாரம் எப்படியோ அண்ணாமலைப் பண்டிதருக்குத் தெரிந்து அவர் அதைத் தவிர்க்க முற்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் அது அவளுக்குத் தெளிவாகப் புரியவைக்காமல் போகவில்லை. எப்படியோ தங்கம் ஒரு பெரிய இக்கட்டிலிருந்து தப்பி விட்டாள் என்று அவள் மன அமைதியடைந்தாள், .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/153&oldid=854261" இலிருந்து மீள்விக்கப்பட்டது