பக்கம்:மன ஊஞ்சல்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மன ஊஞ்சல் தனக்கு முன் பின் அறிமுகமில்லாத அந்தப் பெரிய மனிதர் தன்னைப் பற்றியும் தன் கணவனைப் பற்றியும் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருப்பதைக் கண்டு மீனாட்சி என்ற அந்தப் புதிய பெண்ணும் மிக வியப்படைந்தாள். அண்ணாமலைப் பண்டிதர் படியை விட்டுக் கீழே இறங்கி வந்ததும் மீனாட்சி எழுந்து சென்று அவர் காலடியில் விழுந்து "நீங்கள் தான் என்னை வாழவைக்க வேண்டும்!" என்ன வேண்டிக்கொண்டாள். "பல நாட்களாக நான் அதற்காகத் தான் முயன்று: கொண்டிருக்கிறேன், எதற்கும் காலம் வரவேண்டுமல்லவா? பொறுத்திரு!' என்று பெரிய ஞானவானைப்போல் பதிலளித்தார் பண்டிதர். அதன் பிறகு அவர் மரகத அம்மாள் பக்கம் திரும்பித மரகதம் இந்தப் பெண்ணை வாழவைக்க வேண்டியது உன் பொறுப்பு. அவள் கணவன் அவளை ஏற்றுக்கொள்ளும் வரை நீதான் அவளைப் பராமரித்துக் காப்பாற்ற வேண்டும். செய்வாயா?" என்று உரிமையுள்ளவர்போல் கூறினார். மரகதம்மாள் அவர் பேச்சுக்கு மறுப்புச் சொல்லவில்லை. ஆனால், அவர்களுடைய குடும்பச் செலவு மட்டும் தாளுக்கு நாள் அதிகமாகி வருவதையும், கந்தசாமி வாத்தியார் எங்கெங்கோ போய்க் கடன் வாங்கிச் சமாளித்து வருவதையும், அவள் அந்தச் சமயம் எண்ணிப்பாராமல் இல்லை. மீனாட்சி என்ற அந்தப் பெண்ணும் அவர்கள் வீட்டில் இருக்க ஆரம்பித்த பிறகு, மீனாட்சியும் தங்கமும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள். பக்கத்து வீட்டு ராதாவும் கூட - மீனாட்சியுடன் பழக ஆரம்பித்தாள். ஆனால், பழகப் பழக மீனாட்சியின் குணத்திற்கும், தங்கத்திற்கும்-ஏன் ராதா விற்கும் கூட. ஒத்து வரவில்லை. தங்கம் சுந்தரேசன் காதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/154&oldid=854262" இலிருந்து மீள்விக்கப்பட்டது