பக்கம்:மன ஊஞ்சல்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 145 விவகாரம் ராதாவுக்கோ மீனாட்சிக்கோ தெரியாது. அது ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. இல்லா விட்டால், மீனாட்சி தங்கத்தை ஏசுவதற்கு ஒரு தகுந்த காரணம் அவளுக்கு கிடைத்துவிட்டிருக்கும். மீனாட்சி எப்பொழுதும் தன் பிறந்த விட்டுப் பெருமையைப் பற்றியே பேசுவதும், தன்-தாய் தந்தையர் தனக்குக் கொடுத்துவந்த செல்லத்தைப் பற்றிப் பெருமை யாகக் கூறுவதும், சுந்தரேசனைப் பற்றிப் பற்பலவாறு அவதூறு சொல்வதுமாக இருந்தாள். திருமணமான தொடக்கத்தில் சுந்தரேசன் தான் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டார் என்றும், எப்போதும் தனக்கு அடங்கித்தான் நடப்பார் என்றும், தான் தன் மாமியோடு சண்டை போடும்போதுகூட அவர் தன்னை எதிர்த்துத் தம் தாய் பக்கம் சேரப் பயப்படுவார் என்றும், அப்படிப் பட்டவரை அந்தச் சினிமாக்காரி எப்படியோ வசிய மருந்து. போட்டு மயக்கிவிட்டாள் என்றும், தான் அவரோடு கோபமாகப் போய்விட்டதாகவும் அவள் அடிக்கடி தன்னைப் பற்றிப் பேசிக் குறிப்பிடுவாள், அவள் பேச்சுக்களையெல்லாம் கவனித்துவந்த தங்கம். தன் அத்தான் உள்ளபடியே தி ய கு ன ம் பொருந்தியவராயிருந்தபோதிலும், இந்த மீனாட்சியின் குணமும் போக்குமே அவரை மேலும் தூர்த் தராக்க வழிகோலியிருக்க வேண்டும் என்று எண்ணினாள். கணவன் குறிப்பறிந்து அவன் கருத்துக்கிசைந்து நடந்து வாழ வேண்டியது பெண்களின் கடமை. கணவனே தன் தலைவனெனக்கொண்டு அவன் மனங்கோணாமல் நடந்து அவனைத் தங்கள் மீது பற்றுக்கொள்ளச் செய்து வாழ்வை இன்ப மயமாக்க வேண்டியது பெண்களின் கடமை அதை விட்டு விட்டு இந்த மீனாட்சி என்ற பெண் தன் கணவன்.தன் விருப்பப்படி ஆடினார் என்று பெருமை பேசுவதும், சினிமாக் 0 iساس نتای

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/155&oldid=854263" இலிருந்து மீள்விக்கப்பட்டது