பக்கம்:மன ஊஞ்சல்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மன ஊஞ்சல் காரி வசியப்படுத்தி விட்டாள் என்று முகாரி பாடுவதும் தங்கத்திற்குச் சி றி து கூ ட ப் பிடிக்கவில்லை. நல்ல வேளையாக அவளைக்குத் தான் அவளுடைய கணவன் காதலுக்குப் பாத்திரமான பெண் என்று தெரியவில்லை. என்று உள்ளுர மகிழ்ச்சியடைந்தாள் தங்கம். இல்லா விட்டால், தன்னையும் அந்தச் சினிமாக்காரியின் தரத்தில் வைத்து இந்த மீனாட்சி பேச ஆரம்பித்துவிடக்கூடும் என்றும் பயந்தாள். மனத்துக்கினியவளும் தன்னைப் போலவே கள்ளங் கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்தவளுமான ராதா வுடனேயே இதுநாள்வரை பழகிவந்த தங்கத்திற்கு இப்போது இந்தப் புதுமாதிரியான போக்குடைய மீனாட்சியுடன் பழகுவது சிரமமாயிருந்தது. வெடுக்வெடுக்கென்று பேசுவதும் எதையும் தவறாகவே புரிந்துகொள்வதும், பிறர் கூறுகின்ற வார்த்தைகளுக்கெல்லாம் புதுப்பொருள் காண்பதும் இப்படியாக எதற்கும் மாறுபாடான தன்மையிலே வாதம் புரிவதுமாக இருந்தாள் அந்த மீனாட்சி. தங்கம் அவளுடைய போக்குக்கெல்லாம் வளைந்து கொடுத்துக் கொண்டு தான் வந்தாள். தன் வீட்டில் விருந்தாளியாக வந்துள்ள ஒருத்தியுடன் சண்டை பிடித்துக் கொள்ளக் கூடாதென்று தான் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தாழ்ந்து போனாள். மீனாட்சி மேல் தனக்கு உள்ளுர ஏற்பட்டிருந்த வெறுப்பை எல்லாம் எவ்வளவோ உறுதிகொண்டு அடக்கிக்கொண்டாள். ஆனால், ஒருநாள் அவள் அடக்கிவைத்திருந்த தெல்லாம் வெடித்துக் கிளம்பும் படியான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மீனாட்சி தங்கத்தைப் பலவாறு பழித்துப் பேசி விட்டு அவர்கள் வீட்டை விட்டுக் கோபமாய்ப் புறப்பட்டுப்போய் விட்டாள். அவள் அவ்வாறு போகும்படி நேர்ந்த நிகழ்ச்சி இதுதான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/156&oldid=854264" இலிருந்து மீள்விக்கப்பட்டது