பக்கம்:மன ஊஞ்சல்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LDéf ஊஞ்சல் شققعضصتصنـ 17. ராதா, ஒரு மேதை யானாளோ? புகைவண்டி வேகமாகப் போகும் போது பார்த்தால் பக்கவாட்டில் இருக்கின்ற மரங்கள் எல்லாம் வெகுவேகமாக வண்டிக்கு எதிர்ப்புறமாக ஓடுவதுபோல் தோன்றும். சற்று நிதானமாகத் தன் நினைவோடு கவனித்தால்தான், அவை ஓடவில்லை; வண்டி ஒடுவதால் அவ்வாறு தோன்றுகின்றன என்று அறியமுடியும். மனிதன் மன நிலைக்குத் தகுந்தபடி தான் இயற்கைப் பொருள்களின் தோற்றம் அமைகிறது. கவலையாக இருக்கின்ற மனிதன் தேய்பிறை நிலவைக் காணும்போது, தன் சுகங்கள் தேய்ந்து வருவது போல அதுவும் தேய்ந்து வருவதாக எண்ணுகின்றான், வளர்பிறை நிலவைக் காணும்போதோ, தன் துன்பங்களைப் போல் அதுவும் வளருவதாகக் கற்பனை செய்கிறான். சிலர் மாறு பாடாக நினைப்பதுமுண்டு. காதலன் தன்னோடு இருக்கின்ற போது குளிர்ந்த பாலொளி வீசும் நிலவைக் கண்டு மகிழ்ந்து வாழ்த்துகின்ற காதலி அவனைப் பிரிந்திருக்கும் போது அது தன்னைச் சுடுவதாகக் கருதி வருந்துவதுண்டு. . நிலவும் மற்ற இயற்கைப் பொருள்களும் எப்போதும் போல்தான் இருக்கின்றன. அவற்றிற்கு இயற்கை விதித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/157&oldid=854265" இலிருந்து மீள்விக்கப்பட்டது