பக்கம்:மன ஊஞ்சல்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ம ைஊஞ்சல் முறைப்படி சுழலுவதல்லாமல், வேறு வாழ்வும் தாழ்வும் சுகமும் துக்சமும் கிடையாது, ஆனால், மனிதன் தன் மன நிலைக்கு ஏற்ப அவற்றின் தோற்றத்தைத் தன் போக்குக்கு ஏற்ற முறையிலோ மாறுபட்ட நிலையிலோ இருப்பதாக எண்ணிக் கற்பனை செய்து கொள்ளுகிறான். தங்கம் வீட்டுத் தோட்டத்து மல்லிகையும் பூக்க வேண்டிய பருவத்தில் பூப்பதும், பூக்காத காலத்தில் பூக்கா மவிருப்பதுமாகத் தன் இயற்கைப்படி தான் இருந்து வந்தது. ஆனால், அவள் அந்த மல்லிகைப் பந்தல் பூத்துக் குலுங்கிய காலத்திலெல்லாம் தான் இன்பமாக இருந்ததாகவும், இப்போது தான் அடிக்கடி மனக் குழப்பமடைந்து எப்போதும் கவலையாக இருப்பதைக் கண்டு அந்த மல்லிகைச் செடியும் பூக்காமல் இருப்பதாகவும் எண்ணி வருந்தினாள். பொதுவாக மக்கள் தாம் இன்பமாயிருக்கும்போது வேறு எதைப்பற்றியுமே எண்ணிப் பார்ப்பதில்லை. தங்களுக்கு ஏதாவது துயரம் வந்தால் தான் மற்றவர்களைப்பற்றியோ, மற்ற பொருள்களைப்பற்றியோ, எண்ணிப் பார்ப்பது வழக்கம். இன்று உலகத்திலே மிகப் பெரிய மேதைக ளென்றும் மகான்கள் என்றும் போற்றப்படுகிறவர்களெல்லாம் தாங்கள் ஒரு வகையான துன்பத்தை யடைந்தபோது தான், தங்களைப்போல மற்ற மக்களுள்ளும் பலர் இவ்வாறு துன்பமடைபவர்களாக இருக்கிறார்கள் என்பதை யுணர்ந்து அரும்பெரும் தொண்டு புரியத் தொடங்கியவர்களாக இருக்கக் காண்கிறோம். தங்கம் அப்போது அடைந்திருந்த துன்பமெல்லாம், வெறும் மனத்துயரம் தான். நாம் மிக எளிதாக வெறும் மனத்துயரம்தான் என்று கூறிவிடுகிறோம். ஆனால், அதை அனுபவித்த அவளைக் கேட்டால்தான் அதன் வலிவும் சுமையும் எவ்வளவு என்பது புரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/158&oldid=854266" இலிருந்து மீள்விக்கப்பட்டது