பக்கம்:மன ஊஞ்சல்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் i49 தங்கம் அந்த மல்லிகைப் பந்தலின் அடியில் இருந்தபடி எத்தனையோ விதவிதமான உணர்ச்சிகளுக்காளாகியிருக் கிறாள். எத்தனையோ மாதிரியான சிந்தனைகளில் ஈடுபட்டிருந்திருக்கிறாள். அத்தனைக்கும் அந்த மல்லிகைப் பந்தல் தன்னியல்பான சில மாறுதல்களை அடைந்த தல்லாமல் வேறு மாறுபாடு எதுவும் அடையாமல் அன்றிருந்த படியேதான் இன்றும் இருந்தது. ஆனால், அது தன் மனம் போலவே வெறிச்சென்று இருப்பதாகக் கருதினாள் தங்கம் அவள், தன் அத்தான் சுந்தரேசனைக் கண்டது முதல் அவனிடம் தன் மனம் கொண்ட ஈடுபாட்டினை எண்ணி யெண்ணிப் பார்த்தாள். அத்தான் சுந்தரேசன் தனக்காகவே பிறந்திருப்பதாகக்கூட அவள் எண்ணி மகிழ்ந்த சமயங்கள் எத்தனையோ இருந்தன. தன் மனம் அவனிடம் ஈடுபட்டது போலவே அவன் மனமும் தன்னிடம் வயப்பட்டிருப்பதாக அவள் எண்ணி இன்பமடைந்த நாட்கள் எத்தனையோ இருந்தன, ஆனால் இன்று அவ்வளவும் பொய்யாய், வெறுங் கனவாய்-கானல் நீராய்ப் போய்விட்டன என்பதை எண்ணிப் பார்க்கும்போது அவளால் அந்த உணர்ச்சியைத் தாங்கமுடிய வில்லை. அத்தான் சுந்தரேசன் தன்னை ஏமாற்றியதை நினைக்க நினைக்க அவளுக்குத் துன்பமாயிருந்தது. அவன்மீது பதிந்த தன் மனத்தை மீட்டுக்கொள்வதும் அவளுக்கு அரிதா யிருந்தது. இப்போது அவனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்று நிச்சயமாகத் தெரிந்த பிறகு அவனைப் பற்றி நினைப்பதில் அர்த்தமில்லை என்று அவள் மனம் வாதாடிக் கொண்டிருந்தது. ஆனால், அவனைப் பற்றி நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை, அவள் அவனை மறக்க முயன்ற போதெல்லாம், நடராசனுடைய உருவமும் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/159&oldid=854267" இலிருந்து மீள்விக்கப்பட்டது