பக்கம்:மன ஊஞ்சல்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மன ஊஞ்சல் - சிறிது நேரத்தில் தங்கம் அங்கே வந்து அவர் எதிரே அமெரிக்கையாக நின்றாள். - பருவ எழில் பூத்து குலுங்கிய அந்தப் பச்சைப் பசுங் கொடி போன்ற தன் அழகியப் பெண்ணைப் பார்த்ததும், கந்தசாமி வாத்தியார் முன்னால் ஒன்று கூட்டிச் சேர்த்து வைத்திருந்த தைரியமெல்லாம் சிதறிப் போய் விட்டது, அவருக்குப் பேசுவதற்கு நாவெழவில்லை. "அப்பா, கூப்பிட்டீர்களா?' வாஞ்சையோடு கேட்டாள் தங்கம். வாத்தியார் சிறிது நெஞ்சைத் திடப்படுத்திக் கொண் டார். அம்மா, முருகேச வாத்தியாரை உனக்குத் தெரியுமே?” "ஓ! தெரியுமே! எத்தனை தடவை நம் வீட்டுக்கு வந் திருக்கிறார்! மிக நல்லவரப்பா!! எப்போதும் அவரோடு பேசிக் கொண்டே இருக்கலாம். திருக்குறள் ஒவ்வொன்றுக்கும் அவர் எவ்வளவு அழகாகப் பொருள் சொல்லுகிறார் தெரியுமா?’’ “ஆம் அம்மா! அவர் மகன்...' இதற்குமேல் வாத் தியாரின் வாய் அடைத்துப்போய் விட்டது. வார்த்தைகள் சுத்தமாக வெளிவர மறுத்து விட்டன. அவர் மகனா? நீங்கள் அவருக்கு மகன் இருப்பதாகச் சொல்லவே யில்லையே! அவர்கூடச் சொல்லவே யில்லையே. அப்பா! அவர் மகனும் அவரைப்போல் பண்டிதராக இருப்பார் இல்லையா?' என்று கள்ளமில்லாமல் கேட்டாள் தங்கம். 'அம்மா. அவர் மகன் என்றால் அவருக்குப் பிறந்த மகனல்ல. அவருடைய வளர்ப்புப் பிள்ளை தான்! இப் போது கந்தசாமி வாத்தியாருக்குச் சிறிது தெம்பு வந்து விட் டது. வார்த்தைகளை வெளியே கக்கிவிட்டார். "தங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/16&oldid=854268" இலிருந்து மீள்விக்கப்பட்டது