பக்கம்:மன ஊஞ்சல்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மன ஊஞ்சல் முன்னே தோன்றியது. ஆனால், நடராசனுடைய ஒற்றைக் கையில் இருந்த ஊனத்தை நினைக்கும் போதெல்லாம் அவள் மனம் பின்னடைந்தது. அதுவுமல்லாமல், அந்த ஊனத்தை மறந்து அவனுடைய குண நலன்களையே சீர்தூக்கிப் பார்க் கின்ற போதும் அவள் மனம் நடராசனை ஏற்றுக்கொள்ளப் பின் வாங்கியது. ராதாவின் காதலன் அவன் என்பதை எண்ணும்போது அவனைப்பற்றித் தா ன் சிந்திக்க முற்படுவதே தவறு என்று அவளுக்குப் பட்டது. இப்படி அவள் சுந்தரேசனையும் நடராசனையும் மாற்றி மாற்றித் தன் மனக் கண் முன்னே கொண்டு வந்து குழம்பிக் கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து யாரோ அவளுடைய கண்களைப் பொத்தினார்கள். ‘'என்ன விளையாட்டடி ராதா!' என்று செல்லமாகக் கடிந்து கொண்டே அந்தக் கைகளைத் தன் கைகளினால் விலக்கினாள் தங்கம். அந்தக் கைகள் முரடாயிருப்பதைக் கண்டு திகைப்படைந்து அவள் திரும்பிப் பார்த்தபோது அங்கே அவள் அத்தான் சுந்தரேசன் நின்று கொண்டிருந் தான். - தங்கம் திடுக்கிட்டுப் பின்வாங்கி, 'அத்தான் நீங்களா?” என்று நடுங்கும் குரலோடு கேட்டாள், 'ஏன் தங்கம் நடுங்குகிறாய்? என்றுமில்லாமல் இன்று உன் உடம்புக்கு என்ன வந்துவிட்டது? என்று கேட்டுக் கொண்டே. அவள் நெற்றியில் கை வைத்துப் பாாக்க முன்னுல் நெருங்கி வந்தான் சுந்தரேசன். தங்கம் மேலும் விலகி நின்று கொண்டாள். "அத்தான்! உடம்புக்கு ஒன்றுமில்லை. ஆனால் நீங்கள் என்னிடம் நடந்து கொள்ளும் முறை தான் நன்றாக இல்லை' என்றாள் தங்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/160&oldid=854269" இலிருந்து மீள்விக்கப்பட்டது