பக்கம்:மன ஊஞ்சல்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 151 "என்ன தங்கம் இப்படிப் பேசுகிறாய்! என்று மில்லாத மாதிரியாக இருக்கிறதே உன் பேச்சு! என் ஆருயிர்க் காதலி தங்கம் இப்படியா என்னிடம் பேசுகிறாள்!" என்று தனக்குத் தானே பேசிக் கொள்ளுபவன் போல் நடித்தான் சுந்தரேசன். 'அத்தான். இனிமேல் அந்த மாதிரி நீங்கள் பேச வேண்டாம். உங்கள் காதலை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். உண்மையில் நீங்கள் என்மேல் அன்பு வைத்திருந்தால். உங்கள் மனைவியுடன் ஒற்றுமையாக வாழ முற்படுங்கள். அதுதான் நான் விரும்புவது!’ என்றாள் தங்கம். 'என்ன தங்கம் உளறுகிறாய்! எனக்கா, மனைவியா? ஆம்! இனிமேல் நீதான் மனைவி! உன்னுடன் நான் ஒற்றுமையாக வாழாமலா போய் விடுவேன்.' என்று மேலும் அருவருக்கத் தக்க முறையில் பேசினான் சுந்தரேசன். "அத்தான்! நீங்கள் என்னிடம் சொன்னதெல்லாம் சுத்தப் புளுகென்று தெரிந்து கொண்டு விட்டேன். இதோ உங்கள் மீனாட்சி வந்திருக்கிறாள். வாருங்கள் அவளிடம் உங்களை ஒப்படைத்து விடுகிறேன்.’’ என்று அவன் கையை எட்டிப் பிடித்து வீட்டுப் பக்கமாக இழுத்தாள். 'தங்கம், நீ சொல்வது ஒன்றும் புரியவில்லையே! என்று சுந்தரேசன் கூறிக்கொண்டிருந்தான். அப்போது, வீட்டின் கொல்லைப் பக்கக் கதவு வாசலில் மீனாட்சி தோன்றினாள் அ வ ைள க் கண்டவுடனே சுந்தரேசன், தங்கத்தின் பிடியிலிருந்த தன் கையை உதறிக் கொண்டு வாசற் பக்கமாக ஓடிப் போய்விட்டான். மீனாட்சி விடுவிடுவென்று தோட்டத்திற்குள்ளே வந்தாள். தங்கத்தை எரித்துவிடுவதுபோல் பார்த்தாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/161&oldid=854270" இலிருந்து மீள்விக்கப்பட்டது