பக்கம்:மன ஊஞ்சல்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 மன ஊஞ்சல் "அடி மானங்கெட்டவளே, உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் கணவரோடு கை கோர்த்துக்கொண்டு உலாவியிருப்பாப்!” என்று தங்கத்தைப் பார்த்துக் கடு நஞ்சு போன்ற சொற்களை உதிர்த்தாள். 'அக்கா, நடந்தது என்னவென்று தெரியாமல் நீங்கள் கோபப்படுகிறீர்களே' என்று முதலில் அமைதியாகத் தான் மறுத்துரைத் தாள் தங்கம். ஆனால், மீனாட்சி அவளை வெறுப்போடு நோக்கிக் காதால் கேட்கமுடியாத வார்த்தைகளால் அர்ச்சனை புரிய தொடங்கி விட்டாள். அவள் தன்னை அவமதிப்பாகப் பேசப் பேசத் தங்கத்திற்கு உள்ளம் எரிமலையாய்க் குமுறியது. தான் அதுவரை அந்த மீனாட்சியைப்பற்றி மனத்திற்குள் அடக்கி வைத்திருந்த எண்ணத்தையெல்லாம் தங்கம் வெளிக்கக்கி விட்டாள். கணவனோடு வாழத் தெரியாதவள் என்று தான் கருதியிருந்ததைத் தங்கம் அப்படியே சொல்லிவிட்டாள். உடனே மீனாட்சி அதைப் பெரிதுபடுத்தி, 'எனக்குக் கணவனோடு வாழத் தெரியாவிட்டால், உன்னையா என் கணவனோடு வந்து வாழ்ந்து காட்டச் சொன்னேன்?', என்று கேட்டு இன்னும் பலவாறு பேசிவிட்டு தோட்டத் திலிருந்தபடியே புறப்பட்டுப் போய் விட்டாள். அன்று முழுவதும் தங்கத்தின் இதயம் துடித்துக் கொண்டேயிருந்தது. வீட்டில் மீனாட்சி திடீரென்று புறப்பட்டுப் போய் விட்டதைப் பற்றிக் கேட்டபோது தங்கம் ஏதோ சொல்விச் சமாளித்துக் கொண்டாள். ஆனால் அந்த மீனாட்சி தன்னைக் கேட்ட ஒவ்வொரு வாசகத்தையும் நினைக்க நினைக்க அவளுக்கு அழுகையாக வந்தது. நல்லவர்கள் வாய்விட்டுச் சொல்ல அஞ்சும்படியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/162&oldid=854271" இலிருந்து மீள்விக்கப்பட்டது