பக்கம்:மன ஊஞ்சல்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 153 வார்த்தைகளால் அந்த மீனாட்சி தங்கத்தின் இதயத்தைக் கொத்திக் கொத்திப் புண்ணாக்கி விட்டுப் போய் விட்டாள். இன்பத்துக்கும் துன்பத்துக்கும் தன் இதய உணர்ச்சிக ளோடு பங்கு கொள்ளக் கூடிய ஒரே ஒருத்தியான ராதாவின் விட்டுக்குத் தங்கம் சென்றாள். தனக்கும் மீனாட்சிக்கும். நடந்த வாக்கு வாதத்தையும் மீனாட்சி தன்னைப் பழித்து விட்டுப் போனதையும் கூறிப் பொருமினாள் தங்கம், ராதா தங்கத்திற்காக, வருத்தப் பட்டாள், "நடந்தது சரி, வீட்டை விட்டு அவள் போனதும் நல்லது தான்! இல்லாவிட்டால் நெடுக அவளுடன் மன்றாடிக்கொண்டு கிடக்க வேண்டும். அவளுடைய வார்த்தைகளை நீ பெரிதாக மதிக்க வேண்டாம் என்று பலவாறு சொல்லி ஆறுதல் அளித் தாள் ராதா. தங்கம் சுந்தரேசன் மீது காதல் கொண்டிருந்ததை அப்போதுதான் முதன் முதலில் அறிந்துகொண்ட ராதா, தங்கத்திற்காக மிகவும் பரிதாபப் பட்டாள். பாவம், கண் தெரியாத நிலையில்-கலியாணமான ஒருவனிடம் காதல் .ெ கா எண் டு . அதில் தோல்வி கண்டு துயரப்பட்டுக் கொண்டிருக்கும் தங்கத்தைப் பார்க்கப் பார்க்க அவளுக்குப் பாவமாயிருந்தது. - தங்கம் இவ்வளவு நாளும் தன் உணர்ச்சிகளை மறைத்து வைத்திருந்தாலும், இன்று அவளுடைய காதல் வெறும் ஏமாற்றமாக முடிந்ததை எண்ணி அவளுக்காக இரக்கப்பட்ட ராதா அவள் உள்ளம் அமையும் முறையில் ஆறுதல் கூறித் தேற்றினாள். சுந்தரேசனை இனிமேல் மறந்துவிட வேண்டும் என்று ராதா வற்புறுத்திக் கூறினாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/163&oldid=854272" இலிருந்து மீள்விக்கப்பட்டது